Saturday, May 10, 2008

குருவி பட விமர்சனம்.  


சமீபத்தில் குருவி படம் பார்த்தேன், அது பற்றி ஒரு சின்ன விமர்சனம்.

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜயண்ட் (இந்த பேருக்கு கலைஞர் ஒண்ணும் சொல்லலீங்களா ? ஊருக்கு தான் உபதேசமா ?) பட நிறுவனம் தயாரித்த முதல் படம். கில்லி கூட்டணி மீண்டும் இது தான் படத்துக்கு கொடுக்கப்பட்ட பில்ட் அப்.

கடப்பா குவாரியில் இருந்து கொத்தடிமைகளை விஜய் மீட்பதுதான் கதை. குவாரியின் உரிமையாளர்கள் தான் வில்லன்கள் (சுமன், ஆஷிஷ் வித்யார்த்தி) விஜயின் அப்பா மணிவண்ணன் மற்றும் பலர் எப்படி குவாரியில் கஷ்டப்படுகிறார்கள் என்ற காட்சியுடன் படம் ஆரம்பிக்கிறது. மணிவண்ணன் வில்லன்களிடம் சபதம் செய்கிறார் "எம்மகன் வருவான்டா உங்கள அழிக்க". அப்போதே கதை தெரிந்து விட்டது.

விஜயின் அறிமுக காட்சி ஒரு காமெடி எப்படின்னா அவர் டிட்சில் இருந்து பொங்கி எழுந்து வருகிறார், இந்த காட்சிக்கு தியேட்டரில் சிரிப்பு சத்தம் கேட்டது. கடைசியில் சொன்னார்கள் அவர் டிட்ச் பைப்பை சுத்தம் பண்ண போனார் என்று. சூப்பர் introduction scene. அதுக்கபுறம் அவர் ரேஸ் எல்லாம் ஓட்டுகிறார் ஒரு ஓட்ட கார வெச்சுக்கிட்டு. ஜெயித்தும் காட்டுகிறார். அஜித் மாதிரியே பண்ண விஜய்க்கு ஆசை போல. விவேக் நன்றாக சிரிக்க வைக்கிறார். காமெடி ரொம்ப ஆபாசம். இரட்டை அர்த்தம் எல்லாம் இல்லை, ஒரே அர்த்தம் தான். டைரக்ட் ஆபாசம்.

அதுக்கப்புறம் கடன் காரர் வந்து மெயின் கதையை ஆரம்பிக்கிறார். எப்படின்னா மணிவண்ணன் வாங்கிய கடனை திருப்பி அடைக்க சொல்கிறார். அப்படி முடியாதுன்னா வீட்டை ஏலத்துல விட்ட்ருவேன் என்று மெரட்டுகிறார். விஜய்க்கு பொறுப்புணர்ச்சி வந்து மலேசியா போயி தன் தந்தைக்கு வர வேண்டிய பணத்தை வசூல் செய்ய குருவியாக பறக்கிறார். அங்கேயும் (சுமன்) தான் வில்லன். ஒரே ஆள்தான். கடப்பா + மலேசியா.. த்ரிஷா அவர் தங்கை. அங்கே வில்லன்களிடம் சண்டை போட்டுப்பார்கிறார் விஜய். அவர்கள் கொடுக்க முடியாது பணத்த என்கிறார்கள். அதனால் அங்கிருந்து விலையுயர்ந்த வைரத்தை அமுக்கி கொண்டு திரும்பி வர திட்டம் போடுகிறார். திருடும் போடு சில பல சாகசங்கள் செய்கிறார். அதை பார்த்து த்ரிஷா அவர் மீது காதல் கொள்கிறார். திரும்பி வரும்போது அவரும் விஜயுடன் ஒட்டிக்கொண்டு சென்னை வந்துவிடுகிறார். சுமனும் வருகிறார். த்ரிஷாவையும் வைரத்தையும் தேடி. அதுக்காக சென்னையில் நடக்கும் சண்டையின் போது சுமன் "நான் தான் உங்கப்பாவை கொத்தடிமையாக வெச்சுருக்கேன், முடிஞ்சா கடப்பா வா. " என்று சவால் விடுகிறார். த்ரிஷாவும் வைரமும் விஜயிடம் இருந்து போகிறது. நம்மாளு பொங்கி எழுந்து கடப்பா போயி சண்டை போட்டு அவங்கப்பாவையும் த்ரிஷாவையும் மீட்டாரா (அதுல என்ன சந்தேகம்) என்பது தான் கதை.

அதுக்குள்ள விஜய் படர கஷ்டம் சொல்லி மாளாது. படம் பாக்கிற நம்மளையும் அவரோடு சேத்து கஷ்டப்படுத்தி விடுகிறார்கள். செகண்ட் ஹாபில் விஜய் நடக்கறதே இல்லை. பறக்கறது மட்டும் தான். பட பேருக்கு தகுந்த மாதிரிதான் விஜய் இருக்கனுங்கர இயக்குனரின் கவனம் தெரிகிறது.

படத்தின் குறை நிறைகள்.

நிறைகள்.
....................
.. முதல் பாதி
.. விவேக் காமெடி
.. விஜய் ( ஓவரா வெயிட் கொறக்காதீங்க விஜய் அப்புறம் தனுஷ் மாதிரி ஆயிருவீங்க.)

குறைகள்.
.....................
.. இரண்டாவது பாதி.
.. ஓவர் சண்டை, எப்போ பாத்தாலும் யாரோ யார்கூடவோ சண்டை போட்டுட்டே இருக்காங்க.
.. வில்லன்கள்.
.. சம்பந்தமே இல்லாமல் வருகிற பாடல்கள்.

கில்லி மாதிரி இருக்கும்னு எதிர்பார்த்து போனா ஆப்பு தான். எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் படம் பார்க்க போனால் ஓரளவுக்கு திருப்தி அடைவீர்கள். மொத்தத்தில் இது றெக்கை முறிந்த குருவி.

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories



4 comments: to “ குருவி பட விமர்சனம்.