Sunday, May 18, 2008

ஹீரோவா ஜீரோவா ?.  

நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை சார்பாக சூர்யா, விஜய், மாதவன், ஜோதிகா நடித்து குழந்தைகளின் கல்வியின் முக்கியத்துவத்தை விளக்கி ஒரு டாகுமெண்டரி ரிலீஸ் ஆகியுள்ளது. பார்க்க விரும்புபவர்கள் இங்கே சொடுக்குங்கள்.

கான்செப்ட் என்னன்னா படிச்சாதான் ஹீரோ படிக்கலேன்னா ஜீரோ அப்படின்னு நம்ம ஹீரோக்கள் குழந்தைகளிடம் விளக்குகிறார்கள் ஆடல் பாடலுடன். நடிகர்களுக்கு பொறுப்புணர்வு வந்திருப்பது ரொம்ப நல்ல விசியம். இங்கே சுனாமி வந்த போது கூட ஆஸ்திரேலியாவில் ஓய்வெடுத்த நடிகர்கள் இருக்கிறார்கள். விவேக் ஒபெராய் வந்து நம் நடிகர்களின் கண்களை ஓரளவுக்கு திறந்து விட்டார். மக்களை நம்பி இருக்கும் நடிகர்கள் மக்களுக்காக ஒரு துரும்பை கூட கிள்ளி போடாமல் இருப்பது நல்லதல்ல. அவர்களின் சமூக பொருப்புணர்ச்சியை நிரூபித்தே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளதால் இந்த மாதிரி காட்சிகள் தமிழகத்தில் அரங்கேறுகிறது. மூல காரணம் எதுவாய் இருப்பினும் அவர்கள் செய்யும் விசியம் ரொம்ப நல்லது. இவர்கள் கொடுக்கும் அறிவுரையை ஒரு நூறு பேராவது கேட்டு தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினால் அவர்களுக்கு வெற்றி தான்.

அந்த ஆவண படத்தில் நடிகர்கள் குழந்தைகளிடம், படித்தால் தான் ஹீரோ இல்லனா ஜீரோ என்று அறிவுரை கூறுகிறார்கள். இதை முறைப்படி பெற்றோர்களிடம் விளக்குவது போல் தான் இருந்திருக்க வேண்டும். எந்த குழந்தையும் நான் கல் தான் உடைப்பேன் பள்ளிக்கு போக மாட்டேன் என்று பொதுவாக சொல்லாது. பெற்றோர்களின் வசதியின்மை காரணமாகத்தான் அவர்கள் வேலை செய்யும் படி கட்டாயப்படுத்த படுகிறார்கள்.
சில காட்சிகளில் பெற்றோர்களிடமும் விளக்குகிறார்கள். எல்லா இடங்களிலும் அப்படியே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். விஜய் விளக்கும் காட்சி பொருள் பொதிந்து உள்ளது.

நடிகர்கள் தங்களின் புகழை இந்த மாதிரி ஒரு நல்ல காரியத்துக்கு பயன்படுத்த முயற்சி செய்திருப்பது பாராட்டுக்குரியது. சினிமாக்காரர்கள் நினைத்தால் தங்கள் புகழை இன்னும் நல்ல விதமாக பயன்படுத்த முடியும்.

சினிமா ஹீரோக்கள் எளிதில் நிஜ ஹீரோக்கள் ஆகலாம் இந்த மாதிரி விசியங்களில் அதிக கவனம் செலுத்தினால்.. இல்லையெனில் ஜீரோ தான்...

இன்னொரு கேள்வியும் எழுவதை தவிர்க்க முடியவில்லை. கல்வியின் அவசியத்தை நன்கு கற்ற மேதைகள் (. ம். அப்துல் கலாம்) விளக்குவது / அறிவுறுத்துவது சிறந்ததா இல்லை அதிகம் படிக்காத நடிகர்கள் வலியுறுத்துவது சிறந்ததா ?

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories



4 comments: to “ ஹீரோவா ஜீரோவா ?.

  • Anonymous
    May 19, 2008 at 4:41 PM  

    Yes, Kalviyin avasiyam athai padikkathavarkalukku than theriyum..

    Regards,
    Senthilkumar.M

  • முருகானந்தம்
    May 19, 2008 at 6:30 PM  

    correcta sonne senthil..

    kolandaigal ungalukkellam padippa pathi yenna teriyumnu nadigarlai paarthu kekkama irundaa romba santhosam.. :)

    commentkku nandri.. keep commenting..

  • Anonymous
    May 20, 2008 at 6:26 PM  

    ungal kelvikku badhil...
    Padippin avasiyathi padithu payan petravargal yaar vendumaanalum vilakkalaam muruganand...

    Adbul kalaam avargalai pola vazhkayil vetri petravargualum, vetri paathayil vegamaanga munneri kondirukkum nammai pondravargalum kooda padippin avasiyathai yeduthu uraikkalaam... Vijay, Surya, Madhavan, Jo pondravarlum padithavargal yena nambuvom.. :)

  • முருகானந்தம்
    May 20, 2008 at 9:56 PM  

    who is this ? please dont forget to post ur name from next time :)

    u r correct.. Padippin avasiyathi padithu payan petravargal yaar vendumaanalum vilakkalaam.. aanal jothika, madhavan ponra celebrities panna will it makes sense ??

    i dont think these cinema actors have tat much education to advice someone. But anyway whatever they are doing is a good thing.. :)