Tuesday, April 29, 2008

கழுகுப்பார்வை ஒரு அறிமுகம்...  

கொஞ்ச நாளாவே எனக்கு எழுதற ஆசை அதிகம் ஆயிருச்சு. காரணம் தெரியல. ஆனா எதாவது எழுதி தள்ளிட முடிவு பண்ணி blog போட்டாச்சு. இனிமே எழுத வேண்டியது தான் வேலை. கழுகுப்பார்வைன்னு ப்ளாக்குக்கு பேரு வெக்க காரணம் என்னன்னா கழுகோட பார்வை ரொம்ப கூர்மை. அதோட கண்ணிலிருந்து எதுவும் தப்ப முடியாது. அதே மாதிரி என் பார்வையையும் இந்த சமுகத்தின் மீது கூர்மையாக பதியவைக்க நான் எடுக்கும் முதல் முயற்சி இந்த ப்ளாக் தான். அதனாலதான் இந்த பேரு.

நான் எழுத முக்கிய காரணம் தமிழ் மறந்து போக கூடாது. அப்புறம் ஒரு மன நிம்மதிக்காக. எழுத உலகத்தில் எவ்வளவோ விசியம் இருக்குங்க. தின வாழ்க்கையில் நான் சந்திக்கும் மனிதர்கள், அனுபவங்கள் எல்லாத்தையும் உங்க கிட்ட ஷேர் பண்ணிக்க போறேன்.

இந்த சைட் ல நான் எனக்கு தெரிஞ்ச அரசியல், சினிமா, ஸ்டாக் மார்க்கெட், பொது விசியங்கள அலசி பார பட்சமில்லாம கருத்துக்கள சொல்ல முயற்சி பண்றேன். இதுல ஸ்டாக் மார்க்கெட் பற்றி அடிக்கடி எதாவது எழுதலாம்னு திட்டம். நான் சொல்ல போறது எல்லாமே நானா research பண்ணி கண்டுபுடிக்கல, நான் கேள்வி படர அனுபவ பட்ட விசியங்களை நீங்க ரசிக்கும்படி தருவதுதான் என்னோட நோக்கம். ரொம்ப அறுவ போடாமல் இருப்பதும் என்னுடைய இன்னொரு நோக்கம்.

Build up எல்லாம் ஓகே என்னத்த எழுதி கிழிக்க போறேன்னு கேக்கறது புரியுது. முடிஞ்ச வரைக்கும் முயற்சி பண்றேன், இந்த பொடியன் பண்ற தப்புகள நங்குன்னு தலைல கொட்டி (வலிக்காம தாங்க) திருத்தற உரிமை உங்க எல்லாருக்கும் உண்டு.

இலக்கண பிழைகள் இருந்தால் பெருமனது கொண்டு மன்னியுங்கள். கால போக்கில் சரி செய்து கொள்வேன் நிச்சயமாக.
பொறுமையா இவ்ளோ படிச்சதுக்கு மிக்க நன்றி.

இப்படிக்கு
முருகானந்தம்