Tuesday, September 30, 2008

ஷாருக்கானுக்கு போட்டியாக விஜய் கான்.....  

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு விஜய் கான் என பெயர் சூட்டுவதாக சென்னை திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் இஸ்லாமிய பேரவை என்ற அமைப்பு அறிவித்துள்ளது.

மத்திய சென்னை மாவட்ட தேமுதிக சார்பில் நேற்று இரவு ரம்ஜான் நோண்பு இப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் விஜயகாந்த், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணி செயலாளர் சுதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விஜயகாந்த் நிழ்ச்சியில் நோண்புக் கஞ்சி குடித்தார். பின்னர் பேசுகையில், ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக சர்ச்சுக்கு அருகில் இந்த நோண்பு திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. முஸ்லீம் சமுதாயத்தினர் அனைவரும் நன்கு படித்து வேலைக்குச் செல்ல வேண்டும். அதனால்தான் சமச்சீர் கல்வி வேண்டும் என்று கூறுகிறேன்.

தேமுதிக தேர்தலில் போட்டியிட்டபோது 18 முஸ்லீம்களுக்கு சீட் கொடுத்தேன். அரசியலுக்காக நான் நோண்பு விருந்துக்கு வரவில்லை.

பக்ரீத்துக்கு மட்டன் கொடுத்தேன்

கடந்த பக்ரீத்தின்போது ஏழை முஸ்லீம்களுக்கு மட்டன் கொடுத்தேன். இந்த ஆண்டும் அதிகமாக வழங்கவிருக்கிறேன்.

ஏழைக் குழந்தைகள் கல்விக்காக ஒன்றரை கோடி ரூபாய்க்கு கம்ப்யூட்டர் வாங்கியுள்ளேன். நீங்களும் அதுபோல உதவி செய்யுங்கள்.

நான் எதையும் சொல்ல மாட்டேன். சொன்னால் கண்டிப்பாக செய்வேன் என்றார் விஜயகாந்த்.

நிகழ்ச்சியில் பேசிய திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் இஸ்லாமிய பேரவை தலைவர் முகம்மது பெய்க் பேசுகையில் விஜயகாந்த்துக்கு கேப்டன், புரட்சிக் கலைஞர் என பல பெயர்கள் உள்ளன. எனவே நாங்கள் இன்று அவருக்கு விஜய்கான் என்ற பெயரை சூட்டுகிறோம் என்றார். இதையடுத்து கூட்டத்தில் பலத்த கைத்தட்டல் எழுந்தது.

அதற்குப் பதிலளித்த விஜயகாந்த், எனது மகனுக்கே முஸ்லீம் பெயரைத்தான் வைக்க நினைத்தேன். பிரச்சினை வரும் என்பதால் விட்டு விட்டேன். எனது படங்களில் நடித்தவர்களுக்கு கூட லியாகத் அலிகான், மன்சூர் அலிகான் என பெயரிட்டேன். இப்போது எனக்கு விஜய் கான் என்ற பட்டத்தை கொடுத்துள்ளனர். இதை ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.

பொழக்க தெரிஞ்ச மனுஷன் விஜய் கான்...
Source: Oneindia

Saturday, September 20, 2008

வெர்ஜின் பிடிக்காது எனக்கு, உங்களுக்கு எப்படி ?..  


எப்படி தலைப்பு ? உங்கள உள்ளே வர வெச்சுட்டோம்ள.... 

ஒரு நல்ல மெசேஜ் உள்ள இருக்கறதால இந்த மாதிரி தலைப்பு வெச்சு உங்களை வர வெச்சுட்டேன் அப்படிங்கற வருத்தம் எனக்கு சுத்தமா இல்லை... 

தொடர்ந்து படியுங்க..

வெர்ஜின் மொபைலின் யோ.யோ ப்ளானின் விளம்பரத்தை பார்த்தீர்களா ? இந்த மாதிரி விளம்பரங்கள் ஒரு விதமான சாபக்கேடு. ஒரு புனிதமான சேவையை எவ்வளவு கேவல படுத்த முடியுமோ அவ்வளவு படுத்தி இருக்கிறார்கள். இதை பிரகாஷ் வர்மா என்பவர் நிர்வாணா (சூப்பர் பேரு !) நிறுவனத்தின் சார்பில் இயக்கியிருக்கிறார். 

என்ன கான்செப்ட்னா......... 

ஒரு வாலிபன் கையில் கட்டுடன் ஹாஸ்பிடல் படுக்கையில் படுத்திருக்கிறான். ஒரு நர்ஸ் உள்ளே வருகிறார். அப்பொழுது அந்த பையனின் செல்போன் அடிக்கிறது. கையில் கட்டு போட்டிருப்பதால் அந்த நர்ஸ் ஐ உதவிக்கு அழைக்கிறான். செல்போன் முதலில் ஒரு பான்ட் பாக்கெட்டில் இருப்பதாக சொல்கிறான், நர்சும் உள்ளே கையை விட்டு பார்த்து இல்லை என்று சொல்கிறார். இவனோ இல்ல இல்ல போன் இன்னொரு பாக்கெட்டில் இருப்பதாக சொல்கிறான். நர்சும் இன்னொரு பாக்கெட்டிலும் கையை விட்டு இல்லை என்று சொல்லி விட்டு போய் விடுகிறார். 

அவர் போன பின்பு கையில் ஒளித்து வைத்திருந்த போனை எடுத்து நண்பனிடம் நம்மோட ஐடியா வொர்க் அவுட் ஆயிருச்சுன்னு சொல்லி சிரித்தபடியே பேசுகிறான். அந்த வாலிபனின் ஒரே குறிக்கோள் அந்த நர்ஸ் அவனுடைய பான்ட் பாக்கெட்டில் கையை விட வேண்டும் என்பது தான். என்னே ஒரு உயர்ந்த எண்ணம்...

நர்ஸ் தொழில் ஒரு மிகப்பெரிய சேவை என்று வசனம் பேசிக்கொண்டே இந்த மாதிரி சீரழிவுகளை எளிதில் அனுமதித்து விடுகிறார்கள். விளம்பரம் ஹிட் ஆகவேண்டும் என்ற ஒரே குறிக்கோளுக்காக இந்த மாதிரி விளம்பரம் எடுத்த இயக்குனருக்கு என் பலத்த கண்டனங்கள். விளம்பரம் எடுப்பவர்களுக்கும் ஒரு வித சமூக பொறுப்புணர்வு வேண்டும். ஏன் என்றால் விளம்பரங்களின் ரீச் அப்படி. பட்டி தொட்டியெல்லாம் பார்க்கிறார்கள். அந்த அக்கறை வேண்டும் இயக்குனருக்கு. 

இதே விளம்பரத்தை அடிக்கடி ஒளிபரப்பும் போது அதை பார்க்கும் வாலிபர்கள் நர்ஸ்களை தவறான நோக்கத்துடன் பார்க்க வாய்ப்பிருக்கிறது. இந்த மாதிரி எடுப்பதற்கு பதிலாக நர்ஸ்களை அம்மாவுக்கு இணையாக காட்டுவது போல காட்டியிருந்தால் பார்ப்போர் மனதில் ஒரு வித நல்ல மாற்றங்கள் நிகழலாம். நிகழாவிட்டாலும் ஒண்ணும் பாதிப்பு இல்லை.. ஆனால் இந்த தவறான விளம்பரத்தால் எவனோ ஒருத்தன் நர்சை தவறாக பார்த்தாலோ, நினைத்தாலோ, அல்லது ஏதாவது செய்தாலோ அதற்கு அந்த இயக்குனர் தான் பொறுப்பு..

மகளிர் அமைப்புகளே, செவிலியர் அமைப்புகளே விழித்து கொள்ளுங்கள். விளம்பரத்தை தடை செய்ய இணைந்து போராடுவோம்.........

விளம்பரத்தை பார்க்க விரும்புபவர்கள் இங்கே க்ளிக்கவும்.

Friday, September 19, 2008

தினமும் ரெண்டு குட்டி.. பின்னி பெடலேடுத்த பிடெல் காஸ்ட்ரோ...  

கியூபாவின் முன்னால் அதிபர் பிடெல் காஸ்ட்ரோ எண்பத்து இரண்டு வயதை தாண்டி வாழ்ந்து வரும் ரகசியம் என்னவென்றால் அவர் தன் வாழ்நாளில் முப்பத்து ஐந்தாயிரம் பெண்களுடன் தூங்கினாராம் ( டீசண்டா சொன்னா தூங்கினார் அப்படி வேண்டான்னா படுத்தார்)..

அவருக்கு மதியம் ஒரு குட்டியும், நைட் ஒரு குட்டியும் அவசியமாம்.. ரொம்ப மூடு வந்தா காலைலயும் ஒண்ணு வேணுமாம்.. என்ன ஆளுயா அவரு.. ஒடம்புல ஊத்து ஊறிகிட்டே இருந்திருக்கும் போல.. சாப்படற சாப்பாடு எல்லாம் அதுலேயே போயிருமே.. இந்த உலகின் நிஜ மன்மத ராசா இவர் தான்..

எனக்கொரு சந்தேகம் உடலுறவு கொள்வதை ஆங்கிலத்தில் ஸ்லீபிங் என்று ஏன் அழைக்கிறார்கள் ? உடலுறவுக்கும் தூங்குவதுக்கும் என்ன சம்பந்தம் ? ஒரு வேளை எல்லாம் முடிந்து தூங்குவதை வைத்து அப்படி சொல்லுகிறார்களோ ?.

தகவல் மூலம் : Sify.com

Thursday, September 18, 2008

கரடியாரும் அவர் மகன் வம்பும்...  

நேற்று சிம்புவும் கர.டி.ஆரும் கலந்து கொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. எப்படின்னா ஒரு மிக பெரிய உண்மையை (அப்படியா?) பத்திரிக்கையாளர் முன்னிலையில் போட்டு உடைத்து விட்டார் சிம்பு.

அதாவது அவர் இது வரைக்கும் மதுவை கய்யால தொட்டதே இல்லையாம், ங்கொய்யால.. மக்களே இத நீங்க நம்பறீங்களா ?. வேணும்னா அவர் மதுன்னு பேர்ல இருக்கற பொண்ண வேணா கய்யால தொடாம இருந்திருக்கலாம் அல்லது சரக்க கய்யால தொடாமையே அடித்திருக்கலாம் அல்லது நயன் தாராவின் உதவியுடன் அடித்திருக்கலாம்.  

சினிமாவும் சரக்கும் ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள், நண்டு சிண்டுவெல்லாம் சரக்கடிக்குமாம் அங்கே, அப்படி இருக்கும் பொது சிம்பு அடிக்க மாட்டாரா ? அப்படியே அடிக்கவில்லை என்றால் கலை உலகம் அவரை கட்டம் கட்டி விடாதா ? . அடப்போங்கப்பா...  

இந்த இடத்தில் ஒரு மொக்க கவிதை சொல்லவில்லை என்றால் காலம் என்னை மன்னிக்காது. 

சிம்பு ஒட்டலையாம் காரு
ஆனாலும் அவருக்கு கெட்ட பேரு ...

வந்தாரு கரடியாரு
அவருக்கு சவால் விடறது யாரு ...

சிலம்பரசன் குறளரசன் 
ரெண்டு பேரும் கரடியார் சன் ...

வாய்தான் கரடியார் சொத்து
அது வெச்சு சேருது சொத்து ...

கரடியார் தாவுவார் கட்சி
அவர் இருந்தால் அதிரும் காட்சி ...

எப்போதும் படுவார் ஆவேசம்
கூடவே போடுவார் ரெட்டை வேசம் ...

சிம்புவை சுத்தி எப்பவும் வம்பு
கரடியாரே தட்டி வைங்க இல்லனா சிம்பு ஆவாரு சொம்பு ...

(ஒரு சந்தேகம்) நயன் தாரா பிறப்பாலையே ஒரு தாசி இனத்தை சேர்ந்தவராமே, உண்மையா சிம்பு? தாசியா இருந்தா என்ன இல்லனா என்ன அப்படீங்கறீங்களா ? கரெக்ட். கோழி கூனோ குருடோ கொழம்பு ருசியா இருந்தா சரின்னு போற ஆள் நீங்கன்னு கேள்வி பட்டேன்...

புகைப்படம் நன்றி : IndiaGlitz.com
(டிஸ்கி : இது யாரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்டது அல்ல. அப்படி யார் மனதும் புண்பட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல)

கருத்து சொல்லுங்க நண்பர்களே, சும்மா படிச்சிட்டு மட்டும் போக கூடாது :)

Monday, September 8, 2008

எந்திரன் படப்பிடிப்பு ஆரம்பம். முதல் போட்டோ.  

எந்திரன் படப்பிடிப்பு நேற்று முதல் ஆரம்பம். 

நன்றி. சிஃபி.




















Sunday, September 7, 2008

பீகார் வெள்ள நிவாரண நிதி.  

நீங்கள் ஐசிஐசிஐ வங்கியில் சேமிப்பு கணக்கு + ஆன்லைன் அக்கௌன்ட் வைத்திருந்தால் பீகார் வெள்ள நிவாரண நிதிக்கு நன்கொடை அளிப்பது மிகவும் எளிது. இது கிவ் இந்தியா என்ற தொண்டு நிறுவனத்துக்கு போகிறது. நிதி வழங்கியதற்கான சான்று வீடு தேடி வரும். 

சக மனிதர்களும் மற்ற உயிரினங்களும் கஷ்டப்படும் இந்த நேரத்தில் உதவி செய்வது மிக்க புண்ணியத்தை தேடி தரும்.