Wednesday, May 14, 2008

என் காதல்கள் ..... பகுதி 1.....  


உனக்கெல்லாம் காதல பத்தி என்ன தெரியும்னு நக்கலா கேக்கற நண்பர்களே ! உங்களுக்கெல்லாம் இந்த பதிவின் மூலம் சரியான பதிலடி கொடுக்க வந்தேவிட்டேன். எனக்கு காதல பத்தியும் தெரியும், காதல் பண்ணவும் தெரியும். எப்படின்னு கேக்கறீங்களா தொடர்ந்து படிங்க ..

மேலே இருக்கறது தான் நிஜ இதயத்தோட படம், எப்பவும் காதல்னா ஒரே அம்பு விடற இதயம் படத்த பாத்து போர் அடிச்சு போன ஆயிரக்கணக்கான நல்ல இதயங்களுக்காக ஒரு நிஜ இதயம் படம்..

என் காதல்களை பத்தி இந்த பதிவு உங்களுக்கு தெளிவா சொல்லிரும். நானும் அந்த மயக்கத்தில் கொஞ்ச ரொம்ப காலம் இருந்திருக்கிறேன் இருக்கிறேன் .
ஸ்கூல் போற சமயத்துல இருந்தே அதெல்லாம் ஆரம்பமாயுருச்சுங்க. ஆறாம் வகுப்பிலேயே (too late ?) நாங்கெல்லாம் ஒரு தலை காதல் பண்ணிடோம்ங்க. பொண்ணுக பேரெல்லாம் சொல்ல போறதில்ல. நடந்த விசியங்கள் மட்டும் தான்.

ஸ்கூல் ல ஒரு பொண்ணு எனக்கு ரொம்ப பிடிக்கும் அதுக்கான காரணங்கள்.
.. கமல் ஹாசன்
.. நண்பர்கள்

ரெண்டே காரணம் தாங்க.
அப்படி என்னடா வித்யாசமான காதல்னு கேக்கறது புரியுது. கமல் ஹாசன் இங்க எங்க வந்தாருன்னு கேக்கறீங்களா ? அவரோட படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுல வர்ற காதல் காட்சிகள் தான் எனக்கு தூண்டுகோல். அவர் கதாநாயகிகளை கையாளும் விதத்தில் ஒருவித நளினம் இருக்கும். அப்படியே ரசிகர்களை புல்லரிக்க வைத்து விடுவார். அப்படி இருக்கும் போதுதான், அந்த பொன்நாள் வந்தது.. நான் ஆறாவது சேர போன அதே நாளில் தான் அந்த பொண்ணும் அவங்க அப்பாவோட வந்துச்சு ஸ்கூல் ல சேர.. முதல் காதல் வரப்போவதை அறியாமல் விண்ணப்பத்தில் கையெழுத்து போட்டான் ஒரு நல்லவன் (நான்தாங்க !)...

ரெண்டாவது முக்கியமான காரணம் நண்பர்கள், பேரு கூட நினைவுல இல்ல. ஆனா அவங்க செஞ்சத என்னால மறக்க முடியாது. தெரியாத்தனமா அந்த பொண்ணும் நானும் ஒரே நாள்ல தான் ஸ்கூல் ல ஜாயின் பண்ணோம்னு சொல்லி தொலைச்சுட்டேன். அப்பப்பா அவங்க என்ன டார்ச்சர் பண்ணி நானும் அந்த பொண்ணும் லவ் பண்றோம்னு கத கட்டி விட்டுட்டாங்க. அப்போ தான் அந்த பொண்ணையே நல்லா பாத்தேன், அப்புறம் பசங்க சொல்ற மாதிரி நாம ஏன் அந்த பொண்ணையே காதல் பண்ணி எம்மேல போடப்பட்ட வீண்பழி எல்லாத்தையும் தொடச்சு எறியக்கூடாதுன்னு முடிவு பண்ணி ஒரு தலை காதலுக்கு அஸ்திவாரம் போட்டேன்.

வீண்பழி துடைக்க புறப்பட்டு,
காதல் சுழியில் அகப்பட்டு,
பலியாடு ஆக்கப்பட்டு,
விழி பிதுக்கப்பட்டு,
மொக்க கவிதை எழுதும் அளவுக்கு தள்ளப்பட்டு,
தள்ளாடி நின்றான் ஒருவன் ....

கவிதைங்க.. கொஞ்சம் பொறுத்துக்குங்க.. காதல் வந்தால் கூடவே வரும் இலவச இணைப்பு தானே கவிதை !!!
+2 வரைக்கும் அந்த பொண்ணு என்கூட தான் படிச்சிது. ஆறேழு வருசமா அந்த பொண்ணு கிட்ட நா பேசின வார்த்தைகள் ஒரு பத்து இருக்கும் !! அவ்வளவு தான் என் லவ்வு. என்ன பண்ண சொல்றீங்க. பயம்ங்க.. பேச ரொம்ப பயம் எனக்கு அப்பெல்லாம். என்னோட ஒரு தலை காதல் எப்படியோ அந்த பொண்ணுக்கு தெரிஞ்சிருச்சு. திட்டேல்லாம் கெடைக்கல. ஒரே ஒரு கோப பார்வை தான். சப்த நாடியும் அடங்கிப்போச்சு எனக்கு. +2 முடிஞ்சு போகும் போது சாந்தமா ஒரு பார்வை பாத்தாங்க. அர்த்தம் புரியல. ஆட்டோகிராப் கூட வாங்கிக்கல. போன மாசம் தான் அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆச்சுங்க, காதல் கல்யாணம் !

சரி அத விடுங்க அடுத்த லவ்வ பாப்போம். என்னோட அடுத்த லவ்வு பஸ்ல. நான் காலேஜ் படிக்கும் போது பஸ்ல தான் போய்ட்டு வருவேன். அப்போ அந்த பொண்ணும் பஸ்ல வரும். அப்போ அது +1 படிச்சுட்டு இருந்துச்சு.. நான் காலேஜ் மொதல் வருஷம். ஏஜ் வித்யாசம் எல்லாம் கரெக்டா தாங்க இருந்துச்சு..ஆனாலும் விதி வேலைய காட்டிருச்சு இந்த தடவையும். எப்படின்னு கேக்கறீங்களா ?. அதுக்கு முன்னாடி எப்படி லவ் வந்துச்சுன்னு சொல்றேன். கேளுங்க.

எப்பவும் நான் ஒரே பஸ்ல தான் போவேன், அந்த பொண்ணும் அதே பஸ்தான். அவங்க ஒக்கார எடம் இல்லன்னா ஸ்கூல் பேக்க எங்கிட்ட குடுத்து வெச்சுருக்க சொல்லுவாங்க. அந்த காரணத்துக்காகவே எனக்கு எப்பவும் ஒக்கார எடம் கெடக்கும் படி சில பல முன்னேற்பாடுகள் எல்லாம் பண்ணிவிட்டேன். அப்புறம் என்ன ஒரு தலை காதல் வேதாளம் இங்கேயும் என் இதயத்தில் ஊஞ்சல் கட்டி ஆடியது.. பாவம்ங்க அந்த பொண்ணு கூட்டத்துல நிக்க எடம் இல்லாம எங்கிட்ட பேக்க குடுக்கும். ஆனா என் கொரங்கு மனசு காதல் கொய்யாவ தேடி கண்டபடி தாவும் அந்த நேரத்திலும். எனக்கொரு சந்தேகம்ங்க....

காதல் பஸ்ல வரும், ஆனா தஸ் புஸ்னு மூச்சு வாங்கி நிக்கும் போது வருமா வராதா ??
தெளிவா பார்க்ல ஒக்காந்து பேசினா காதல் வரும், ஆனா நிக்க இடமில்லாமல் முக்கி முனகி திக்கி திணறும் போது வருமா வராதா ??
பூத்து
நிக்கும் பூஞ்சோலை பெண்ணுக்கு வேத்து பூத்து நிக்கும்போது காதல் வருமா வராதா ??

கண்டிப்பா வராதுங்க அதுக்கு நான் க்யாரண்டி.. எப்படி வரும் சும்மா பேக்க மட்டும் வாங்கி பத்திரமா வச்சுருந்தா ? எதாவது பேசினா தானே வரும். பேசினேன் நானும் ரெண்டு வருசத்துல இருபது வார்த்தைகள். ஓரளவு முன்னேற்றம் தான் எனக்கு முந்தைய காதலோடு ஒப்பிட்டா. ஆனா என்ன பண்ண அந்த பாம்பு இருபது வார்த்தை மகுடிக்கெல்லாம் மயங்காத மல பாம்பு. அது எனக்கு ரொம்ப லேட்டா தான் தெரிஞ்சுது. அந்த பொண்ணுக்கு போன வருசம்தாங்க கல்யாணம் ஆச்சு, இதுவும் காதல் கல்யாணம் !

எனக்கு ஒரு ராசிங்க, நான் யாரையெல்லாம் ஒரு தல காதல் பண்றேனோ அவங்கெல்லாம் காதல் கல்யாணம் தான் பண்ணிக்கறாங்க. உங்க ஊர்ல யாருக்காவது கல்யாணம் ஆகணுன்னா சொல்லுங்க....

அவ்வளவு தானா உன் லவ்வுன்னு கேக்கறீங்களா ? இல்லவே இல்லங்க.. இதெல்லாம் என் படிப்புலக வாழ்க்கையில் நடந்தவை. மீதிய ரெண்டாம் பாகத்துல பாப்போம்....... ரெண்டாம் பாகத்தில் கொஞ்சம் சீரியஸ் லவ் எல்லாம் இருக்குங்க. கண்டிப்பா படிக்க மறக்காதீங்க....... கூடிய விரைவில்.......

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories



6 comments: to “ என் காதல்கள் ..... பகுதி 1.....