Monday, September 28, 2009

நிஜ வேட்டைக்காரன் விஜய் ஆண்டனி.  

விஜய் ஆண்டனியின் ஒவ்வொரு ஆல்பமும் பிரம்மிக்க வைக்கிறது. சாருக்கு நிஜமாவே சரக்கு இருக்கு. ஹாரிஸ் ஜெயராஜ் ஒரே மாதிரி பாடல்களையும், ரஹ்மானுக்கு படங்களே இல்லாமலும் இருக்கும் இந்த நேரத்தில் விஜய் ஆண்டனி ஒவ்வொரு பாடலுக்கும் நல்ல வித்யாசம் காட்டுகிறார். இப்போதைக்கு இவர் தான் தமிழின் நம்பர்-1 இசையமைப்பாளர்.

நேற்று வேட்டைக்காரன் பாடல்களை கேட்டேன். இன்று மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.

முதல் பாடல், என் உச்சிமண்டைல சுர்ருங்குது ........
அண்ணாமலை எழுதியுள்ள பாடலை பாடியுள்ளவர்கள் கிருஷ்ணா அய்யரும் ஷோபா சேகரும். ரசிக்க வைக்கும் பாடல். மந்திரக்காரா மாய மந்திரக்காரா வரியில் ஏதோ ஒரு இனம் புரியாத சுகம்.

ரெண்டாவது பாடல், கரிகாலன் கால போல ........
கபிலன் எழுதியுள்ள பாடலை பாடியுள்ளவர்கள் சுர்ஜித்தும் சங்கீதாவும். சூப்பர் பாட்டு. தெம்மாங்கு பாடல் போல இடையிடையில் வரும் இசையும் வரிகளும் புல்லரிக்க வைக்கிறது.

மூன்றாவது பாடல், நான் அடிச்சா தாங்க மாட்டே ........
விஜயின் அறிமுக பாடல் இது. கபிலன் எழுதி ஷங்கர் மகாதேவன் பாடியுள்ளார். இந்த ஆண்டில் பட்டி தொட்டியெல்லாம் ஒலிக்க போகும் குத்து பாடல் இது தான். நல்லா சவுண்ட் வெச்சு கேக்கும் போது, கால்கள் தானாக ஆடுவதை தவிர்க்க முடியாது. விஜய் ரசிகர்கள் திரையரங்கில் நிச்சயம் குத்தாட்டம் போடலாம்.

நாளாவது பாடல், ஒரு சின்ன தாமரை ........
விவேகா எழுதி கிரிஷ்-உம் சுசித்ராவும் பாடியுள்ளனர். மெலடி ரகம் இது. நல்ல இனிமையான பாடல். இசையும் வரிகளும் அருமை. மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது.

ஐந்தாவது பாடல், புலி உறுமுது ........
கபிலன் எழுதி அனந்து மற்றும் மகேஷ் விநாயகமும் பாடியுள்ளனர். விஜய் வில்லன்களை பலி வாங்க போகும் போது வரும் பாடல் என்று யூகிக்க முடிகிறது. கேட்கும் படியாக உள்ளது.

மொத்தத்தில் அனைத்து பாடல்களும் தெளிவாக புரிகிறது மிக எளிதாக. ரசிக்கும் படியான பாடல்களை கொடுத்திருக்கும் விஜய் ஆண்டனிக்கு வாழ்த்துக்கள். குறை சொல்ல முடியாத நல்ல ஆல்பம். தாராளமாக கேளுங்கள்.

விஜய் ஆண்டனி தான் நிஜ வேட்டைக்காரன். ரசிகர்களின் மனங்களை வேட்டையாடுவார் நிச்சயமாக.

கமெண்ட்ஸ் ப்ளீஸ். பிடிச்சிருந்தா ஓட்டும் போடுங்க. நன்றி.

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories



6 comments: to “ நிஜ வேட்டைக்காரன் விஜய் ஆண்டனி.