Sunday, November 22, 2009

மொக்கையா.. செம மொக்கையா..  

பொழுது போகாமல் டிவியின் முன்னாடி ஒக்காந்து சேனல் மாத்தி மாத்தி பாத்துக்கிட்டே இருந்தேன் இன்னிக்கு மதியம். இந்த சன் நெட்வொர்க் தொல்ல தாங்க முடியல. அவங்களோட எந்த சேனல தொறந்தாலும் டீலா நோ டீலான்னு அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் விளம்பரங்களை போட்டு வறுத்தெடுத்து கொண்டிருக்கிறார்கள். அதிலும் பாட்டு, ஆட்டம், கண்ணீர் என்று பல மசாலாக்கள்.

வழக்கம் போல இதுவும் சன் நெட்வொர்க்கின் சொந்த ஐடியா இல்லை. கிட்டத்தட்ட லோகோ உட்பட அனைத்தையும் சுட்டுவிட்டார்கள். கிட்டத்தட்ட 75 நாடுகளில் இதன் பல்வேறு வடிவங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இதன் மூலம் dutch காரர்களின் மூளை.

நிகழ்ச்சியை பற்றி சொல்வதற்கு ஒரு மண்ணும் இல்லை. மாடல்களை மொத்தமாக வாடகைக்கு எடுத்து கையில் பெட்டியுடன் ஷோ கேஸ் பொம்மைகள் போல நிற்க வைத்திருக்கிறார்கள். பங்கேற்பாளர் சொல்லும் பெட்டியை திறக்கும் மிக கடினமான வேலை அவர்களுக்கு.

தொகுப்பாளர் ரிஷி பாவம், சோனி டிவியின் Dus ka dum இல் சல்மான் கான் செய்யும் மேனரிசங்களை அப்படியே காப்பி அடிக்கிறார். சட்டையை கழட்டுவது மட்டும் தான் பாக்கி. பெருங்குரலெடுத்து சில நேரங்களில் ஓலமிடுகிறார், குரங்கு சேட்டை செய்கிறார். இவரை மாற்றி விட்டு ஒரு பெரிய ஸ்டாரை போட்டால் ஷோ பிக் அப் ஆக வாய்ப்பிருக்கிறது. கோடீஸ்வரன் நிகழ்ச்சியே எவ்வளவோ பரவாயில்லை. சரத் குமார் மிக அருமையாக தொகுத்திருந்தார். அவர் மாதிரி ஒரு சினிமா நட்சத்திரம் இருந்தால் நிகழ்ச்சி தப்பும் இல்லையேல் கூடிய சீக்கிரம் விளம்பரதாரர்கள் ஜகா வாங்கிவிடுவார்கள்.

இதுல பேங்கர் வேற. அது யாரு கலாநிதியா?.

வர வர சன் டிவியின் அட்டூழியம் தாங்க முடியல. அவர்களின் சொந்த பட விளம்பரங்களை அவர்களின் சொந்த டிவியில் வேறு விளம்பரதாரர்கள் பணத்தில் ஒளிபரப்புகிறார்கள். உதாரணம் : Ponds white beauty கண்டேன் காதலை விளம்பரங்களை சன் டிவியில் ஒளிபரப்புவது. இரட்டை வருமானம் சன் டிவிக்கு.

இனி அடுத்தடுத்து வரும் அவர்களின் படங்களில் ஹீரோயின் நிச்சயம் எதாவது ஒரு க்ரீமோ, பல்பொடியோ, அல்லது தொடப்ப கட்டையோ வாங்குவது மாதிரி காட்சி நிச்சயம் வரும். ஏன்னா இரட்டை வருமானம் பாத்து பழகினவங்க சும்மா இருக்க மாட்டாங்க. எந்திரனில் ரஜினி எதாவது ஒரு சோப்பு பேரை சொல்லி நிச்சயம் கேப்பாரு பாருங்க. ரஜினியின் தீவிர ரசிகர்கள் சோப்பை மாற்ற இப்போதே தயாராக இருக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பின் குறிப்பு : மேலே உள்ள இரண்டு படங்களும் இந்த நிகழ்ச்சியின் வேறு நாட்டு வெர்சன் படங்கள். ஏதாவது வித்தியாசம் தெரியுதா உங்களுக்கு?. எவ்வளவு தெளிவா சுட்டிருக்காங்கன்னு பாருங்க மக்களே.

ஓட்டு போடுங்க, போடாதவர்களுக்கு கண்டேன் காதலை படத்தின் விளம்பரங்கள் தொடர்ந்து நாலு நாள் அவங்க வீட்டு எந்த சேனலை தொறந்தாலும் வரக்கடவது.

Wednesday, November 11, 2009

ஈழம் - நம் மௌனம் - தாய்ப்பாலில் நஞ்சு.  


நமது ரத்த சொந்தங்கள் படும் துயரத்தை உலகுக்கு பறைசாற்றும் புத்தக வெளியீடு. பல பிரபலங்கள் இப்புத்தகத்தில் ஈழம் பற்றிய தங்களின் உணர்வுகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஈழத்தின் உண்மை நிலையை உலகுக்கு எடுத்துக்காட்டும் நிழல்படங்கள் இப்புத்தகத்தில் முக்கிய இடம் வகிக்கிறது.

அனைத்திந்திய ஊடகங்கள் உற்று நோக்கும் வரலாற்று நிகழ்வு இது, ஆகவே பெருந்திரளாக கலந்துகொண்டு நமதுணர்வை வெளிப்படுத்துவோம்.

அனுமதி இலவசம். அனைவரும் வருக.

Saturday, November 7, 2009

கமல் ஹாசர்-55-வாழ்த்து மடல்.  

உலக நாயகனின் 55 ஆவது பிறந்த நாள் இன்று. அவர் பல்லாண்டு வாழ்ந்து மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள். இந்த இனிய நேரத்தில் அவருக்கு என்னால் இயன்ற ஒரு வாழ்த்து மடல் கீழே.

களத்தூர் கண்ணம்மாவில் அறிமுகமான பிஞ்சு நீ
ரசிகர்களின் நெஞ்சில் எப்போதும் நீ..

மூன்றாம் பிறையில் முத்திரை பதித்து
ஆயிரம் பிறை கண்ட அபூர்வ முத்தே..

சலங்கை ஒலியினிலே ரசிகனை மயக்கிய மயக்க மருந்தே
உன் நினைவிலே வாழும் ரசிகனுக்கு என்றென்றும் நீ ஒரு விருந்தே..


நாயகனில் நாயகனே
நீதான் கன்னிகளின் கனவு நாயகனே..

குள்ளமாய் தோன்றி உள்ளம் கவர்ந்த அபூர்வ சகோதரனே
உனக்கு ஏது ஈடு இணையே..

தேவர் மகனில் நீ சிவாஜியின் மகன்
ஆனால் நிஜத்திலோ நீ தமிழகத்தின் தலை மகன்..

இந்தியனில் நீ தாத்தா
உன் இதயத்தை தமிழனுக்கு தா தா..

ஹே ராமில் நீ காந்தி தாசன் ஆனாய்
தமிழர்கள் கமல் தாசன் ஆனார்கள்..

நீ தெனாலி
தமிழர்களின் பங்காளி..

சினிமாவில் பகுத்தறிவை விதைக்கும் சண்டியன் நீ
தமிழனை தலை நிமிர்த்திய இண்டியனும் நீ..

வசூல் வேட்டை நடத்தும் வசூல் ராஜா நீ
டாக்டர் பட்டம் பெற்ற சிரிப்பு வைத்தியன் நீ..

வேட்டையாடி விளையாடிய சிங்கமே
உன்னை மறந்தால் தமிழனுக்கு அசிங்கமே..

கமல் = சிவாஜி + 1 என்று புது கணக்கை போட்ட புலியே
தசாவதாரம் முன்னாள் மற்ற படங்கள் எலியே..

நம்மைபோல் ஒருவனாய் சீரிய சிறுத்தையே
தமிழன் தொடர்வான் உன் கருத்தையே..

நீ செய்தாய் உடல் தானம்
மற்றவர்களுக்கு நீ என்றுமே முன்னுதாரணம்..

தமிழனுக்கு நீ கற்றுக்கொடுத்தாய் முத்தம்
அதை செவ்வனே செய்வான் உன் ரசிகன் நித்தம்..

எல்டாம்ஸ் ரோட்டின் பெயர் மாற்றம் எல்லாம் கம்மி
தமிழ்நாட்டையே கமல்நாடக்கினால் நன்றியுரைப்பேன் நெஞ்சு விம்மி..

உலக நாயகனே
இனியும் நீ சாதிக்க ஏதுமுண்டா?..

உன் சாதனைகள் முன்னாள் இமயம் குள்ளம்
வாழ்க உன் உயர்ந்த உள்ளம்..

வாழ்க நீ பல்லாண்டு
ரசிகர்களின் உள்ளத்தை எப்போதும் ஆண்டு..

கமெண்ட்ஸ் ப்ளீஸ். பிடிச்சிருந்தா ஓட்டும் போடுங்க. நன்றி.