Sunday, November 22, 2009
மொக்கையா.. செம மொக்கையா..
பொழுது போகாமல் டிவியின் முன்னாடி ஒக்காந்து சேனல் மாத்தி மாத்தி பாத்துக்கிட்டே இருந்தேன் இன்னிக்கு மதியம். இந்த சன் நெட்வொர்க் தொல்ல தாங்க முடியல. அவங்களோட எந்த சேனல தொறந்தாலும் டீலா நோ டீலான்னு அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் விளம்பரங்களை போட்டு வறுத்தெடுத்து கொண்டிருக்கிறார்கள். அதிலும் பாட்டு, ஆட்டம், கண்ணீர் என்று பல மசாலாக்கள்.
வழக்கம் போல இதுவும் சன் நெட்வொர்க்கின் சொந்த ஐடியா இல்லை. கிட்டத்தட்ட லோகோ உட்பட அனைத்தையும் சுட்டுவிட்டார்கள். கிட்டத்தட்ட 75 நாடுகளில் இதன் பல்வேறு வடிவங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இதன் மூலம் dutch காரர்களின் மூளை.நிகழ்ச்சியை பற்றி சொல்வதற்கு ஒரு மண்ணும் இல்லை. மாடல்களை மொத்தமாக வாடகைக்கு எடுத்து கையில் பெட்டியுடன் ஷோ கேஸ் பொம்மைகள் போல நிற்க வைத்திருக்கிறார்கள். பங்கேற்பாளர் சொல்லும் பெட்டியை திறக்கும் மிக கடினமான வேலை அவர்களுக்கு.
தொகுப்பாளர் ரிஷி பாவம், சோனி டிவியின் Dus ka dum இல் சல்மான் கான் செய்யும் மேனரிசங்களை அப்படியே காப்பி அடிக்கிறார். சட்டையை கழட்டுவது மட்டும் தான் பாக்கி. பெருங்குரலெடுத்து சில நேரங்களில் ஓலமிடுகிறார், குரங்கு சேட்டை செய்கிறார். இவரை மாற்றி விட்டு ஒரு பெரிய ஸ்டாரை போட்டால் ஷோ பிக் அப் ஆக வாய்ப்பிருக்கிறது. கோடீஸ்வரன் நிகழ்ச்சியே எவ்வளவோ பரவாயில்லை. சரத் குமார் மிக அருமையாக தொகுத்திருந்தார். அவர் மாதிரி ஒரு சினிமா நட்சத்திரம் இருந்தால் நிகழ்ச்சி தப்பும் இல்லையேல் கூடிய சீக்கிரம் விளம்பரதாரர்கள் ஜகா வாங்கிவிடுவார்கள்.
இதுல பேங்கர் வேற. அது யாரு கலாநிதியா?.
வர வர சன் டிவியின் அட்டூழியம் தாங்க முடியல. அவர்களின் சொந்த பட விளம்பரங்களை அவர்களின் சொந்த டிவியில் வேறு விளம்பரதாரர்கள் பணத்தில் ஒளிபரப்புகிறார்கள். உதாரணம் : Ponds white beauty கண்டேன் காதலை விளம்பரங்களை சன் டிவியில் ஒளிபரப்புவது. இரட்டை வருமானம் சன் டிவிக்கு.
இனி அடுத்தடுத்து வரும் அவர்களின் படங்களில் ஹீரோயின் நிச்சயம் எதாவது ஒரு க்ரீமோ, பல்பொடியோ, அல்லது தொடப்ப கட்டையோ வாங்குவது மாதிரி காட்சி நிச்சயம் வரும். ஏன்னா இரட்டை வருமானம் பாத்து பழகினவங்க சும்மா இருக்க மாட்டாங்க. எந்திரனில் ரஜினி எதாவது ஒரு சோப்பு பேரை சொல்லி நிச்சயம் கேப்பாரு பாருங்க. ரஜினியின் தீவிர ரசிகர்கள் சோப்பை மாற்ற இப்போதே தயாராக இருக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பின் குறிப்பு : மேலே உள்ள இரண்டு படங்களும் இந்த நிகழ்ச்சியின் வேறு நாட்டு வெர்சன் படங்கள். ஏதாவது வித்தியாசம் தெரியுதா உங்களுக்கு?. எவ்வளவு தெளிவா சுட்டிருக்காங்கன்னு பாருங்க மக்களே.
ஓட்டு போடுங்க, போடாதவர்களுக்கு கண்டேன் காதலை படத்தின் விளம்பரங்கள் தொடர்ந்து நாலு நாள் அவங்க வீட்டு எந்த சேனலை தொறந்தாலும் வரக்கடவது.

November 22, 2009 at 8:42 PM
உங்கள் பதிவு அருமை .......
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
November 22, 2009 at 8:56 PM
நன்றி உலவு.காம் ..
November 23, 2009 at 11:10 AM
விளம்பரத்தை பாக்கும்போதே எனக்கு வாந்தி வர மாதிரி இருக்கு... இதுல முழு நிகழ்ச்சியையும் எப்படிதான் பாக்கரானுங்களோ ?
த.மாறன் : தமிழ் நாட்டு மக்கள் ரொம்ப நல்லவங்க
க.மாறன் : எப்படி சொல்றீங்க?
த.மாறன் : எவ்வளவு மொக்கையா நிகழ்ச்சியை போட்டாலும் ..சலிக்காம பாக்குறானுங்க ...
November 23, 2009 at 11:30 AM
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி யூர்கன் க்ருகியர் :)
November 23, 2009 at 11:34 AM
உங்க பேரு வித்தியாசமா இருக்கு யூர்கன் க்ருகியர் .
ரூம் போட்டு யோசிச்சு வெச்சுகிட்ட பேர் மாதிரி இருக்கு. :)