மொக்கையா.. செம மொக்கையா..
நிகழ்ச்சியை பற்றி சொல்வதற்கு ஒரு மண்ணும் இல்லை. மாடல்களை மொத்தமாக வாடகைக்கு எடுத்து கையில் பெட்டியுடன் ஷோ கேஸ் பொம்மைகள் போல நிற்க வைத்திருக்கிறார்கள். பங்கேற்பாளர் சொல்லும் பெட்டியை திறக்கும் மிக கடினமான வேலை அவர்களுக்கு.
தொகுப்பாளர் ரிஷி பாவம், சோனி டிவியின் Dus ka dum இல் சல்மான் கான் செய்யும் மேனரிசங்களை அப்படியே காப்பி அடிக்கிறார். சட்டையை கழட்டுவது மட்டும் தான் பாக்கி. பெருங்குரலெடுத்து சில நேரங்களில் ஓலமிடுகிறார், குரங்கு சேட்டை செய்கிறார். இவரை மாற்றி விட்டு ஒரு பெரிய ஸ்டாரை போட்டால் ஷோ பிக் அப் ஆக வாய்ப்பிருக்கிறது. கோடீஸ்வரன் நிகழ்ச்சியே எவ்வளவோ பரவாயில்லை. சரத் குமார் மிக அருமையாக தொகுத்திருந்தார். அவர் மாதிரி ஒரு சினிமா நட்சத்திரம் இருந்தால் நிகழ்ச்சி தப்பும் இல்லையேல் கூடிய சீக்கிரம் விளம்பரதாரர்கள் ஜகா வாங்கிவிடுவார்கள்.
இனி அடுத்தடுத்து வரும் அவர்களின் படங்களில் ஹீரோயின் நிச்சயம் எதாவது ஒரு க்ரீமோ, பல்பொடியோ, அல்லது தொடப்ப கட்டையோ வாங்குவது மாதிரி காட்சி நிச்சயம் வரும். ஏன்னா இரட்டை வருமானம் பாத்து பழகினவங்க சும்மா இருக்க மாட்டாங்க. எந்திரனில் ரஜினி எதாவது ஒரு சோப்பு பேரை சொல்லி நிச்சயம் கேப்பாரு பாருங்க. ரஜினியின் தீவிர ரசிகர்கள் சோப்பை மாற்ற இப்போதே தயாராக இருக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பின் குறிப்பு : மேலே உள்ள இரண்டு படங்களும் இந்த நிகழ்ச்சியின் வேறு நாட்டு வெர்சன் படங்கள். ஏதாவது வித்தியாசம் தெரியுதா உங்களுக்கு?. எவ்வளவு தெளிவா சுட்டிருக்காங்கன்னு பாருங்க மக்களே.
ஓட்டு போடுங்க, போடாதவர்களுக்கு கண்டேன் காதலை படத்தின் விளம்பரங்கள் தொடர்ந்து நாலு நாள் அவங்க வீட்டு எந்த சேனலை தொறந்தாலும் வரக்கடவது.