Saturday, June 14, 2008

ஜன்னத்(ஹிந்தி) பட விமர்சனம்.  

இன்று ஜன்னத்(Jannat) பார்த்தேன் ஆங்கில சப் டைட்டிலுடன்..

வாவ். நான் இந்த ஆண்டு பார்த்த ஹிந்தி படங்களில் தாரே ஜமின் பர்-க்கு பிறகு என்னை கவர்ந்தது இந்த படம் தான். ஹிந்தி கமல் (முத்தம் கொடுப்பதில் மட்டும்) இம்ரான் ஹஸ்மி ஹீரோ. இந்த படம் கிரிக்கெட் பெட்டிங் தொடர்பானது. ஆகையால் ரொம்ப ஆர்வமாக பார்க்க அமர்ந்தேன். இனி பார்ப்போம் சீன் பை சீன்.

காசுக்கு கார்ட்ஸ் ஆடி டைம் பாஸ் பண்ணும் ஒரு சாதாரண ஊதாரி வாலிபனாக ஹீரோ அறிமுகம் ஆகிறார். அவர் கார்ட்ஸ் ஆடும் போதே அவர் காசுக்காக எந்த ரிஸ்க்கும் எடுக்க கூடியவர் என்று தெளிவாக சொல்லி விடுகிறார்கள். ஏரியா தாதா விடம் கடன் வாங்கி கார்ட்ஸ் ஆடி ஒரு லட்சம் கடனாளி ஆகிறார் ஹீரோ. தாதா பணம் கேட்டு அடிக்கடி மிரட்டுகிறார்.

அடுத்து கதாநாயகி அறிமுகம். ஷாப்பிங் மாலில் ஹீரோ ஹீரோயினை பார்க்கிறார். காதல் ஆரம்பம். ஹீரோயின் வாங்க காசு இல்லாமல் ஒரு மோதிரத்தை ஏக்கமாக பார்த்து கொண்டிருக்கும் போது ஹீரோ அதிரடியாக கண்ணாடியை உடைத்துக்கொண்டு அறிமுகம் ஆகிறார். நண்பரின் பணத்தில் அதே மோதிரத்தை வாங்கி ஹீரோயினிடம் கொடுக்கிறார். ஹீரோயினை கவர இன்னும் பல வழிகளில் பந்தா செய்கிறார். நிறைய பணம் தேவைப்படுகிறது.

அப்பொழுது தான் தற்செயலாக அவருக்குள் ஒளிந்திருக்கும் ஒரு திறமை வெளிப்படுகிறது. அதாவது கிரிக்கெட் மேட்ச் பார்க்கும் போது அடுத்து என்ன நடக்கும் என்று guess செய்வது. முழுசாக நம்ப முடியவில்லை என்றாலும் காட்சியமைப்பு நம்ப வைக்கிறது. லோக்கலில் பெட்டிங் செய்து சில பல லட்சம் மற்றும் காருக்கு அதிபதி ஆகிறார். ஹீரோயினும் கவரப்படுகிறார் ஒரு வழியாக. அடுத்து சில பாடல்கள். இதற்கிடையில் போலீஸ் சந்தேகப்பட்டு ஹீரோவை கைது செய்ய ஆதாரம் தேடுகிறது. ஸ்மார்ட் CBI அதிகாரி ஒருவர் அறிமுகம் ஆகிறார். அடுத்து பெரிய bookie யான வில்லனின் அறிமுகத்தால் தென் ஆப்ரிக்கா போகிறார் ஹீரோ. அங்கும் வெற்றி மேல் வெற்றி தான்.

கிரிக்கெட் வீரர்களின் வீக் பாயிண்டை பிடித்து அதை நிறைவேற்றுவதன் மூலம் விளையாட்டின் முடிவு ஹீரோவால் தீர்மானிக்க படுகிறது. ஹீரோயினும் தென் ஆப்ரிக்கா அழைத்துவரப்படுகிறார் ஹீரோவால். சொகுசு மாளிகையில் வாழ்க்கையை (கல்யாணம் பண்ணாமல் தான்) ஆரம்பிக்கிறார்கள். அடுத்து அதே CBI ஆபிசர் தென் ஆப்ரிக்கா வந்து ஹீரோயினிடம் பேசி ஹீரோ செய்யும் பெட்டிங்கை போட்டு கொடுத்து விடுகிறார். பெரிய bookie வில்லன் பெட்டிங்கில் பணம் பண்ணி அதை தீவிரவாத செயலுக்கு பயன்படுத்துகிறார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்கிறார். ஹீரோயின் ஹீரோவிடம் கோபப்படுகிறார். ஹீரோயின் கர்ப்பம் வேறு ஆகி விடுகிறார்(இதுவும் கல்யாணம் ஆகாம தாங்க!). ஹீரோவின் மனதை மற்ற பல வழிகளில் ஹீரோயின் முயற்சி செய்கிறார்.

ஆனால் வில்லன் பணம் காய்க்கும் மரமான ஹீரோவை விட மறுக்கிறார். வில்லன் ஹீரோவிடம் கடைசியாய் ஒரே ஒரு உலக கோப்பை தொடரில் வேலை செய் அப்புறம் நீ போய் விடு பெரிய சொத்துடன் என்கிறார். ஹீரோவும் ஒத்துக்கொள்கிறார். அதற்காக ஒரு வீரரிடம் பேரம் பேசும் போது அந்த அணியின் கோச் பார்த்து விடுகிறார் (அந்த கோச் பாப் வூல்மர் போலவே இருக்கிறார்). வில்லனின் ஆட்கள் அந்த கோச் ஐ கொலை செய்து விடுகிறார்கள். பழி ஹீரோவின் மீது விழுகிறது. போலீஸ் துரத்துகிறது.

இறுதி கட்ட காட்சியில் ஹீரோவை சரண் அடைய சொல்லி ஹீரோயின் வற்புறுத்துகிறார். அதன்படி ஹீரோவும் செய்கிறார். ஆனால் விதி வேறு விதமாக விளையாடுகிறது. இந்த படத்தின் கிளைமாக்ஸ் மூன்று படத்தின் கிளைமாக்ஸ் ஐ எனக்கு நினைவில் கொண்டு வந்தது. gangster(ஹிந்தி), பீமா மற்றும் திருட்டு பயலே. எப்படி என்றால் ஹீரோ சரண் அடைய ஒத்துக்கொண்டு துப்பாக்கியை கீழே போடுகிறார். அப்பொழுது அந்த ஹீரோயினின் மோதிரமும் துப்பாக்கியின் அருகில் கீழே விழுந்து விடுகிறது. அதை எடுக்க குனிகிறார். அப்பொழுது போலீஸ் துப்பாக்கியை தான் எடுக்கிறார் என்று நினைத்து சுட்டு கொன்று விடுகிறார்கள். ஹீரோயின் ஆபாச வார்த்தைகளில் காவல் துறையை வசை பாடுகிறார். அத்துடன் படம் முடிகிறது. எனக்கு ஒரு நிறைவான படம் பார்த்த திருப்தி.

படத்தின் நிறைகள்.
.. நல்ல திரைக்கதை.
.. இம்ரானின் பொருத்தமான நடிப்பு.
.. கிளைமாக்ஸ்

குறைகள்.
.. ஹீரோயின் (அட்டு பிகர், ஹிந்தி நடிகை மாதிரியே இல்லைங்க. வேஸ்ட் )
.. திடீர் என்று முளைக்கும் தெய்வீக காதல்.

மொத்தத்தில் குறைகளை விட நிறைகளே அதிகம். படத்தை தாராளமாக பார்க்கலாம். இந்த படத்தை பார்த்து முடித்தவுடன் எனக்கு கிரிக்கெட் மீதான ஆர்வம் கொஞ்சம் குறைந்தது என்னவோ உண்மை தான். அதே உணர்வு தான் உங்களுக்கும் உண்டாகும். பார்த்து விட்டு சொல்லுங்கள்.

மதிப்பெண் - 7 / 10

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories2 comments: to “ ஜன்னத்(ஹிந்தி) பட விமர்சனம்.