Sunday, June 29, 2008

தசாவதாரம் விமர்சனங்களை பற்றி ஒரு விமர்சனம்.  

அப்பப்பா.. கமலே உங்களுக்கு இதெல்லாம் தேவையா? ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளை போலவே நீங்களும் படம் எடுத்திருந்தால் இவ்வளவு விமர்சனங்களை சந்தித்து இருக்க மாட்டீர்கள். உங்கள் பிரச்சினையே புதுசாக நீங்கள் முயற்சி செய்வது தான். குருவி போல மசாலா குப்பைகளை ரசிக்கும் ரசிகர்கள் உங்கள் படத்தை கண்டபடி விமர்சிக்கிறார்கள். தமிழ் சினிமாவில் புது சோறு சாப்பிட முயற்சி செய்வது நீங்கள் தான். மற்ற அனைவரும் பழைய சோறு தான் சப்பு கொட்டி சாப்பிடுகிறார்கள் என்பது என் தாழ்மையான கருத்து.

கருத்து சொல்லவும் படத்தை பார்க்காமல் இருப்பதட்கும் அனைவருக்கும் உரிமை உண்டு. படத்தில் குறைகள் உள்ளது என்பது உண்மை தான். குறையே இல்லாத படங்களை யாராலும் தர முடியாது. குறைகளை விட நிறைகள் சிறிது அதிகம் இருந்தால் படம் ரசிக்கும் படி இருக்கும். அது தசாவதாரத்துக்கும் பொருந்தும்.

கமல் எவ்வளவு நல்ல படம் தந்தாலும் அதை சரியில்லை என்று சொல்வதற்கு ஒரு கூட்டம் இருக்கிறது. 'அன்பே சிவம்' என்று ஒரு நல்ல படத்தை கமல் தந்தார். அதை எத்தனை பேர் ரசித்து பார்த்தார்கள் ? கமலின் படங்களுக்கு இவ்வளவு லாஜிக் கேட்கும் மக்கள் 'சாமி' போன்ற லாஜிக் இல்லாத மசாலா குப்பைகளை எப்படி பார்க்கிறார்கள் ?. கமல் மட்டும் என்ன இளித்த வாயரா? எல்லாரையும் போலவும் அதை விடவும் சிறப்பாகவும் மசாலா படங்களை கமலால் நிச்சயமாக தர முடியும். ஆனால் அவர் அதை எல்லாம் விட்டு விட்டு ஏன் புது முயற்சி செய்கிறார் ? எல்லாருக்கும் பிடிக்கும் படி படம் எடுப்பது இயலாத காரியம்.

என்னை மிகவும் கடுப்படித்த விமர்சனம் விகடன் விமர்சனம் தான். வெறும் 43 மார்க் கொடுத்திருந்தார்கள். குருவிக்கும் அதே மார்க் தான், அஜித் பில்லாவுக்கும் அதே மார்க் தான். அவர்கள் எந்த படத்துக்கு தான் நூறு மார்க் கொடுப்பார்கள்? தெரியவில்லை. நூறெல்லாம் நான் கேட்கவில்லை இந்த படத்துக்கு. ஆனால் குருவிக்கும், அஜித் பில்லாவுக்கும் கொடுத்த மார்க் தான் தசாவதாரத்துக்கும் என்றால் என்னால் சகித்து கொள்ள முடியவில்லை.

விகடனில் விமர்சனத்தில் சொல்லியிருக்கிறார்கள் " பல்லாயிரம் உயிர்களைப் பலிகொண்ட சுனாமியை இப்படி ஒரு கோணத்தில் அணுகலாம் என்ற ஒரு புள்ளிதான் கதை. ஆனால், ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகி, ஊரே துடிதுடித்துத் திரியும் சூழலில், கமலும் அசினும் காதல் பேசுவது... ஸாரி ! "..

ஒரு நண்பர் நச்சுன்னு கேட்டிருந்தார். "சென்னையில் சுனாமி வந்து பல்லாயிரம் பேர் இறந்த போது விகடன் என்ன செய்தது ? போட்டோ பிடித்து கவர் ஸ்டோரி போட்டதை தவிர ?. சுனாமி வந்து இவ்வளவு பேர் இறந்து விட்டார்கள் என்று வருந்தி அந்த வார விகடனில் ஜோக் எதுவும் போடாமலா இருந்தார்கள் ?. காதல் கதை எதுவும் வரவே இல்லையா அந்த வாரம் ?. இப்படி செய்யும் விகடன் இந்த கமெண்டை தசாவதாரத்துக்கு கொடுக்கும் தகுதி இருக்கிறதா ?"

அதே தான் என்னோட கேள்வியும்.

என்னை பொறுத்த வரையில் தசாவதாரம் என்பது ஒரு பாடம். Chaos தியரி பற்றி என் படிக்கும் ஆர்வத்தை தூண்டியது இந்த படம் தான். எதிர்பார்த்த படி படம் இல்லை என்றாலும் படம் என்னை ஏமாற்றவில்லை. ஒரு முறை தாரளமாக பார்க்கலாம் திரை அரங்கில். புரியவில்லை என்றால் மீண்டும் பாருங்கள் திருட்டு V.C.D யில்....

Thursday, June 19, 2008

வசூல் ராஜா..  

தசாவதாரத்தின் ஒரு வார வசூல் வாய் பிளக்க வைக்கும் நூறு கோடி !!!

சோர்ஸ் : Economic Times

கமலின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி இது !

Saturday, June 14, 2008

ஜன்னத்(ஹிந்தி) பட விமர்சனம்.  

இன்று ஜன்னத்(Jannat) பார்த்தேன் ஆங்கில சப் டைட்டிலுடன்..

வாவ். நான் இந்த ஆண்டு பார்த்த ஹிந்தி படங்களில் தாரே ஜமின் பர்-க்கு பிறகு என்னை கவர்ந்தது இந்த படம் தான். ஹிந்தி கமல் (முத்தம் கொடுப்பதில் மட்டும்) இம்ரான் ஹஸ்மி ஹீரோ. இந்த படம் கிரிக்கெட் பெட்டிங் தொடர்பானது. ஆகையால் ரொம்ப ஆர்வமாக பார்க்க அமர்ந்தேன். இனி பார்ப்போம் சீன் பை சீன்.

காசுக்கு கார்ட்ஸ் ஆடி டைம் பாஸ் பண்ணும் ஒரு சாதாரண ஊதாரி வாலிபனாக ஹீரோ அறிமுகம் ஆகிறார். அவர் கார்ட்ஸ் ஆடும் போதே அவர் காசுக்காக எந்த ரிஸ்க்கும் எடுக்க கூடியவர் என்று தெளிவாக சொல்லி விடுகிறார்கள். ஏரியா தாதா விடம் கடன் வாங்கி கார்ட்ஸ் ஆடி ஒரு லட்சம் கடனாளி ஆகிறார் ஹீரோ. தாதா பணம் கேட்டு அடிக்கடி மிரட்டுகிறார்.

அடுத்து கதாநாயகி அறிமுகம். ஷாப்பிங் மாலில் ஹீரோ ஹீரோயினை பார்க்கிறார். காதல் ஆரம்பம். ஹீரோயின் வாங்க காசு இல்லாமல் ஒரு மோதிரத்தை ஏக்கமாக பார்த்து கொண்டிருக்கும் போது ஹீரோ அதிரடியாக கண்ணாடியை உடைத்துக்கொண்டு அறிமுகம் ஆகிறார். நண்பரின் பணத்தில் அதே மோதிரத்தை வாங்கி ஹீரோயினிடம் கொடுக்கிறார். ஹீரோயினை கவர இன்னும் பல வழிகளில் பந்தா செய்கிறார். நிறைய பணம் தேவைப்படுகிறது.

அப்பொழுது தான் தற்செயலாக அவருக்குள் ஒளிந்திருக்கும் ஒரு திறமை வெளிப்படுகிறது. அதாவது கிரிக்கெட் மேட்ச் பார்க்கும் போது அடுத்து என்ன நடக்கும் என்று guess செய்வது. முழுசாக நம்ப முடியவில்லை என்றாலும் காட்சியமைப்பு நம்ப வைக்கிறது. லோக்கலில் பெட்டிங் செய்து சில பல லட்சம் மற்றும் காருக்கு அதிபதி ஆகிறார். ஹீரோயினும் கவரப்படுகிறார் ஒரு வழியாக. அடுத்து சில பாடல்கள். இதற்கிடையில் போலீஸ் சந்தேகப்பட்டு ஹீரோவை கைது செய்ய ஆதாரம் தேடுகிறது. ஸ்மார்ட் CBI அதிகாரி ஒருவர் அறிமுகம் ஆகிறார். அடுத்து பெரிய bookie யான வில்லனின் அறிமுகத்தால் தென் ஆப்ரிக்கா போகிறார் ஹீரோ. அங்கும் வெற்றி மேல் வெற்றி தான்.

கிரிக்கெட் வீரர்களின் வீக் பாயிண்டை பிடித்து அதை நிறைவேற்றுவதன் மூலம் விளையாட்டின் முடிவு ஹீரோவால் தீர்மானிக்க படுகிறது. ஹீரோயினும் தென் ஆப்ரிக்கா அழைத்துவரப்படுகிறார் ஹீரோவால். சொகுசு மாளிகையில் வாழ்க்கையை (கல்யாணம் பண்ணாமல் தான்) ஆரம்பிக்கிறார்கள். அடுத்து அதே CBI ஆபிசர் தென் ஆப்ரிக்கா வந்து ஹீரோயினிடம் பேசி ஹீரோ செய்யும் பெட்டிங்கை போட்டு கொடுத்து விடுகிறார். பெரிய bookie வில்லன் பெட்டிங்கில் பணம் பண்ணி அதை தீவிரவாத செயலுக்கு பயன்படுத்துகிறார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்கிறார். ஹீரோயின் ஹீரோவிடம் கோபப்படுகிறார். ஹீரோயின் கர்ப்பம் வேறு ஆகி விடுகிறார்(இதுவும் கல்யாணம் ஆகாம தாங்க!). ஹீரோவின் மனதை மற்ற பல வழிகளில் ஹீரோயின் முயற்சி செய்கிறார்.

ஆனால் வில்லன் பணம் காய்க்கும் மரமான ஹீரோவை விட மறுக்கிறார். வில்லன் ஹீரோவிடம் கடைசியாய் ஒரே ஒரு உலக கோப்பை தொடரில் வேலை செய் அப்புறம் நீ போய் விடு பெரிய சொத்துடன் என்கிறார். ஹீரோவும் ஒத்துக்கொள்கிறார். அதற்காக ஒரு வீரரிடம் பேரம் பேசும் போது அந்த அணியின் கோச் பார்த்து விடுகிறார் (அந்த கோச் பாப் வூல்மர் போலவே இருக்கிறார்). வில்லனின் ஆட்கள் அந்த கோச் ஐ கொலை செய்து விடுகிறார்கள். பழி ஹீரோவின் மீது விழுகிறது. போலீஸ் துரத்துகிறது.

இறுதி கட்ட காட்சியில் ஹீரோவை சரண் அடைய சொல்லி ஹீரோயின் வற்புறுத்துகிறார். அதன்படி ஹீரோவும் செய்கிறார். ஆனால் விதி வேறு விதமாக விளையாடுகிறது. இந்த படத்தின் கிளைமாக்ஸ் மூன்று படத்தின் கிளைமாக்ஸ் ஐ எனக்கு நினைவில் கொண்டு வந்தது. gangster(ஹிந்தி), பீமா மற்றும் திருட்டு பயலே. எப்படி என்றால் ஹீரோ சரண் அடைய ஒத்துக்கொண்டு துப்பாக்கியை கீழே போடுகிறார். அப்பொழுது அந்த ஹீரோயினின் மோதிரமும் துப்பாக்கியின் அருகில் கீழே விழுந்து விடுகிறது. அதை எடுக்க குனிகிறார். அப்பொழுது போலீஸ் துப்பாக்கியை தான் எடுக்கிறார் என்று நினைத்து சுட்டு கொன்று விடுகிறார்கள். ஹீரோயின் ஆபாச வார்த்தைகளில் காவல் துறையை வசை பாடுகிறார். அத்துடன் படம் முடிகிறது. எனக்கு ஒரு நிறைவான படம் பார்த்த திருப்தி.

படத்தின் நிறைகள்.
.. நல்ல திரைக்கதை.
.. இம்ரானின் பொருத்தமான நடிப்பு.
.. கிளைமாக்ஸ்

குறைகள்.
.. ஹீரோயின் (அட்டு பிகர், ஹிந்தி நடிகை மாதிரியே இல்லைங்க. வேஸ்ட் )
.. திடீர் என்று முளைக்கும் தெய்வீக காதல்.

மொத்தத்தில் குறைகளை விட நிறைகளே அதிகம். படத்தை தாராளமாக பார்க்கலாம். இந்த படத்தை பார்த்து முடித்தவுடன் எனக்கு கிரிக்கெட் மீதான ஆர்வம் கொஞ்சம் குறைந்தது என்னவோ உண்மை தான். அதே உணர்வு தான் உங்களுக்கும் உண்டாகும். பார்த்து விட்டு சொல்லுங்கள்.

மதிப்பெண் - 7 / 10

Sunday, June 8, 2008

நூறு ரூபாய் நோட்டு...  

நேற்று ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் ஏ.டி.எம்மில் நான் எடுத்த நூறு ரூபாய் நோட்டை தான் உங்கள் பார்வைக்கு இங்கே கொடுத்துள்ளேன். நான் எடுத்தது மொத்தம் ஐந்தாயுரம் ரூபாய் (வீட்டு வாடகை மற்றும் இதர செலவுகளுக்காக) . எண்ணி மட்டும் பார்த்தேன் ஐம்பது நோட்டு இருக்கிறதா என்று. ஒவ்வொரு நோட்டையும் சரிவர செக் செய்யாமல் விட்டதன் விளைவு இப்பொழுது ப்ளாக்கில் பொலம்பும் படி ஆகிவிட்டது.

இது முழுக்க முழுக்க வங்கியின் தவறு. சரிவர செக் செய்யாமல் ஏ.டி.எம் இயந்திரத்தில் கிழிந்த ரூபாய் நோட்டுக்களை போடுகிறார்கள். இதை யாரிடம் முறையிடுவதென்று இந்த முன்னேறிய தகவல் தொழில்நுட்ப உலகத்தில் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படியே புகார் கூறினாலும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஏ.டி.எம்மில் தான் அந்த நூறு ரூபாய் தாள் எடுக்கப்பட்டது என்பதற்கு நான் எதை சாட்சியாக கூற முடியும் ? எனக்கு ஒரு மண்ணும் புரியவில்லை.

இந்த பிரச்சனையை கையாள எனக்கு உங்கள் ஆலோசனை தேவை நண்பர்களே.. ஹெல்ப் ப்ளீஸ்...

Tuesday, June 3, 2008

கலைஞர் 85..  

இன்று ( ஜூன் 3 ) கலைஞரின் 85 ஆவது பிறந்த நாள். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு கலைஞர் அய்யா அவர்களே.

பிறந்த நாள் கொண்டாடும் இந்த இனிய நேரத்தில் அவருக்கு சில remainder's.
.. ஹோகேனக்கள் என்னாச்சு கலைஞர் அய்யா ? அவ்ளோ தானா ? கர்நாடகத்தில் ஆட்சியும் வந்தாச்சு அறியணையும் ஏறியாச்சு, திட்டத்தை முடக்க கர்நாடகத்தில் திட்டம் தீட்டப்படுகிறது. சரத் குமார் கேட்டது நியாயமான கேள்வி நம்ம வீட்டு பைப்ல தண்ணி பிடிக்க யார கேக்கணும். காவேரி கர்நாடகத்தில் இருந்து வந்தாலும் அவர்கள் பிரித்து கொடுக்கும் தண்ணீரில் இருந்து தான் நாம் இந்த திட்டத்தை நிறைவேற்றுகிறோம். இந்த திட்டத்துக்காக அவர்கள் ஒண்ணும் அதிக தண்ணி விட போவதில்லை. அப்புறம் எதுக்கு இவ்ளோ பிரச்சனை பண்ணுகிறார்கள் என்று தெரியவில்லை. ஆகவே அய்யா கூடிய விரைவில் திட்டம் நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுங்கள்.

.. சேது சமுத்திரம் என்னாச்சு ? உங்கள் பிறந்த நாள் விழாவில் எப்பாடு பட்டாவது திட்டத்தை நிறைவேற்றுவேன் என்று நீங்கள் உறுதி கூறியது சந்தோசமான விசியம். திட்டத்தில் பல ஓட்டைகள் இருப்பதாக அறிகிறேன். பெரிய கப்பல் போகாது போன்ற குறைகள் பெரியதாக expose செய்யப்படுகிறது. அந்த மாதிரி காரணங்களை சுட்டி காட்டி திட்டத்தை தடுக்க முயன்றால் பாராட்டலாம், ஆனால் அவர்கள் கடவுளின் பெயரால் அல்லவா திட்டத்தை முடக்க பெரு முயற்சி செய்கிறார்கள். மத்திய அமைச்சர் பாலுவின் கப்பல்கள் ஓடுவதற்கே திட்டத்தை நிறைவேற்றுகிறார்கள் என்று எதிரி கட்சிகள் கூச்சல் போடுகிறார்கள். அது உண்மையாகவே இருந்தாலும் சேது சமுத்திரம் எல்லாருக்கும் பொதுவானது. யார் வேண்டுமானாலும் கப்பல் விடலாம். பாலு தடுக்க மாட்டார் நிச்சயமாக. ஆகவே அய்யா விரைந்து நடவடிக்கை எடுங்கள். சேது பாலத்தை இடிக்காமல் வேறு வழியில் திட்டத்தை நிறைவேற்றவும் சாத்யகூறுகளை ஆராய்வது நல்லது.

இந்த தள்ளாத வயதில் நீங்கள் உங்களால் முடிந்த அளவு மக்கள் பணியாற்றுகிறீர்கள், நான் முன்பொரு பதிவில் சொன்னது போல் நீங்கள் ஓய்வெடுப்பது நல்லது பொறுப்புகளை பகிர்ந்து அளியுங்கள் கலைஞர் அவர்களே. ஓவர் லோட் இந்த வயதில் நல்லதில்லை என்பது என் தாழ்மையான கருத்து.

கலைஞரிடம் இருந்து கட்சி பேதமில்லாமல் கற்றுக்கொள்ள இளைய தலைமுறைக்கு நிறைய விசியங்கள் இருக்கிறது.

கலைஞரிடம் எனக்கு பிடித்த விசியங்கள் கீழே.
.. தமிழ் ஆற்றல்.
.. தமிழ் வளர ஓரளவுக்கு முயற்சிகள் எடுப்பது.
.. வார்த்தை பிரயோகம்.
.. நக்கல் பேச்சு.
.. சுறுசுறுப்பு.
.. உழவர் சந்தை மாதிரி நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தும் திறமை.

அவரிடம் எனக்கு பிடிக்காதது.
.. குடும்பத்துக்கு அதிக முக்கியத்துவம்.
.. சில நேரங்களில் அவர் எடுக்கும் சுய நலமான முடிவுகள்.
.. சில திட்டங்களை நிறைவேற்றும் போது வேகக்குறைவு. உதாரணம் ஹோகேனக்கள் குடிநீர் திட்டம்.
.. ஓவர் பொறுமை, சில நேரங்களில் ஜெ ஜெ போன்றவர்களின் அதிரடி அரசியல் தான் சரியாக வரும்.

கட்சி பேதமின்றி அனைத்து தரப்பிலிருந்தும் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன . கலைஞரின் நிறை குறைகளை நீங்களும் அலச இது ஒரு நல்ல வாய்ப்பு. Don't miss it !.. :)