தமிழக அரசியல் நிலவரம்..
கடந்த இரு வாரங்களில் தமிழகம் பார்த்த அரசியல் சதுரங்க ஆட்டங்களை உங்களுக்கு தொகுத்து வழங்குகிறேன்.
கலைஞர் உடல் நிலை.
கவலை அளிக்கும் விசியம் தி.மு.க தொண்டர்களுக்கு. கழுத்து மற்றும் முதுகு வழி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு வீடு திரும்பிவிட்டார். கலைஞருக்கு இப்போதைய அவசிய தேவை ஓய்வு. அது அவருக்கு கிடைக்க அவர் பொறுப்புகளை பகிர்ந்து அளிக்கலாம். திரு. அன்பழகனுக்கு முதல்வர் ஆக ஒரு வாய்ப்பு கொடுக்கலாம். அவர் விரும்பாவிடில் திரு.ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி அளிக்கலாம். என்னை கேட்டால் வாரிசு அடிப்படையில் வருவது ஒன்றும் கொலை குற்றம் இல்லை. உலகம் முழுவதும் குடும்பத்தவர் ஆட்சிக்கு வருவது ஒன்றும் புதிதல்ல. திரு. ஸ்டாலினுக்கு என்ன பிரச்சனை என்றால் அவரை அவர் தந்தையுடன் ஒப்பிட்டு மதிப்பீடு செய்கிறார்கள். அது தவறு. தந்தையின் திறமையை மகனிடமும் எதிர் பார்ப்பது தவறு. கிரிக்கெட் உதாரணம் வேண்டுமானால் ரோகன் கவாஸ்கர். வாரிசு அடிப்படையில் மந்திரி ஆன தயாநிதி மாறன் பல நல்ல காரியங்களை செய்தது யாராலும் மறுக்க முடியாது. அதே மாதிரி ஸ்டாலினுக்கும் ஒரு வாய்ப்பாவது கொடுத்து அவரின் பர்பாமன்ஸ் பார்த்தால் ஒன்றும் தவறில்லை என்பது என் கருத்து.
அமைச்சர் பூங்கோதை ராஜினாமா.
அரசு இயந்திரத்தை தவறாக பயன் படுத்தியதாக குற்றம் நிரூபிக்கப்பட்டு அவரே பதவியை ராஜினாமா செய்து விட்டார் அல்லது செய்ய வைக்கப்பட்டார். இந்த தவறை வெளிச்சம் போட்டு காட்டி புண்ணியத்தை தேடிக்கொண்டவர் சுப்ரமண்ய சுவாமி அவர்கள். ஆவணங்களுக்காக ரெகார்ட் பண்ணிவெச்ச பேச்சு எப்படியோ சுவாமி கையில் சிக்கி ரிலீஸ் ஆகி விட்டது. இன்னும் கூட நிறைய மந்திரிகள் பேசிய பேச்சு இருக்கிறது என்கிறார் சுவாமி. சுவாமி மாதிரி ஆட்களும் தேவை தான் அப்பொழுதுதான் ஆட்சியாளர்களுக்கு சற்று பயம் இருக்கும். ஆனாலும் அரசு இயந்திரத்தை அவர்கள் தவறாக உபயோகிக்க மாட்டார்கள் என்று சொல்ல முடியாது. வேண்டுமானால் தொலை பேசியில் தொல்லை தருவது குறையலாம். கலைஞருக்கு ஒரு கேள்வி, இதே மாதிரி வேறு யாராவது மூத்த மந்திரி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் உங்கள் நிலை/முடிவு என்ன ?
கார்த்திக் கட்சியில் இருந்து நீக்கம்.
இந்த நிகழ்ச்சி என்னை வெகுவாக ரசித்து சிரிக்க வைத்தது. காரணம் கார்த்திக் போன்ற காமெடி அரசியல்வாதியை தமிழகம் கண்டதில்லை என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். கார்த்திக் ஒரு கூல் அரசியல்வாதி. பொதுக்குழு கூட்டம் நடந்தாலும் கொடைக்கானலில் ஓய்வெடுக்ககூடிய தில்லு இவருக்கு மட்டும் தான் இருக்கிறது. ஸோ ஸ்பெஷல் அரசியல்வாதி. தொப்பி கூலிங் கிளாஸ் இல்லாமல் இவரை பார்க்கவே முடியாது. கட்சியின் அகில இந்திய தலைவர் பிஸ்வாஸ் இவரை பதவி நீக்கம் செய்துவிட்டார். உடனடியாக இன்னொரு கட்சி ஆரம்பிக்க தொண்டர்கள் கார்த்திக்கை வலியுறித்தி தொந்தரவு செய்வதாக கார்த்திக் ஒரு பேட்டியில் கூறினார். முன்னேற துடிக்கும் அரசியல்வாதிகள் விஜயகாந்திடம் இருந்து பல விசியங்களை கற்றுக்கொள்ளவேண்டும்.
ஜெ ஜெ வின் உற்சாகம்.
நீண்ட ஓய்வை ஜெ ஜெ நடனமாடி கொண்டாடினார் கொடநாட்டில். தொண்டர்கள் கொஞ்சம் உற்சாகம் அடைவார்கள். வாக்காளர்களிடம் நெருக்கத்தை கூட்டிக்கொள்ள அரசியல்வாதிகள் பின் பற்றும் முறை இது. எம்.ஜி.ஆர் முதல் ராஜீவ் காந்தி வரை அனைவரும் இதே மாதிரி பல வழிவகைகளை கையாண்டு தொண்டர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்கள். என்னை கேட்டால் ஜெ ஜெ ஒரு நல்ல பொறுப்புள்ள எதிர்க்கட்சி தலைவியாக இன்னும் சிறப்பாக செயல் பட முடியும். மூன்று மாதத்துக்கு ஒரு தடவை சட்ட மன்றம் போனாலே தன் கடமை முடிந்துவிட்டதென்கிற எண்ணத்தை ஜெ ஜெ கை விட வேண்டும். மக்கள் பிரச்சனைகளுக்காக அதிகம் குரல் கொடுக்க வேண்டும். ராமதாஸ் அய்யா கூட்டணியில் இருந்து கொண்டே அரசுக்கு குடைச்சல் தருகிறார். நியாயப்படி பார்த்தால் அதிமுக தான் எதிர் கட்சி. ஆனால் பா.ம.க. தான் அரசை அதிகம் எதிர்த்து செய்திகளில் அடி படுகிறது. ஜெ ஜெ கொஞ்சம் இதையெல்லாம் கவனிப்பாரா ??
நண்பர்களே, தங்கள் கருத்துக்களை முடிந்த வரை பதிவு செய்யுங்கள்..
0 comments: to “ தமிழக அரசியல் நிலவரம்.. ”
Post a Comment