நடிகர்கள் திரையில் புகைபிடிப்பது சரியா ??
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ரொம்ப நாளாகவே நடிகர்களின் மீது தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கிறார் எதாவது ஒரு காரணத்தை சொல்லி. அவற்றை விரிவாக பார்ப்போம்.
அவர் சொல்வது என்னவென்றால் நடிகர்கள் திரையில் தோன்றும் போடு மது, புகைபிடிப்பது போன்ற காட்சிகளில் தோன்ற கூடாது அப்படி செய்தால் ரசிகர்கள் அதன் மூலம் கெட்டு தவறான வழிக்கு போகிறார்கள் என்பது தான். இது ஓரளவுக்கு சரி, சில சமயங்களில் படிக்காத பாமர ரசிகன் தான் தலைவன் திரையில் செய்வதை நேரில் செய்து பார்க்க ஆசைப்படுகிறான். அதனுடைய பின் விளைவுகளை பற்றி அவன் யோசிப்பதில்லை. ஆனால் பெரும்பாலான சமயங்களில் ரசிகனுக்கு தெரியும் எது சரி எது தவறு என்று. நடிகர்கள் திரையில் புகைப்பதால்தான் எல்லாரும் புகைபிடிக்கிறார்கள் என்பது இல்லை, அதே மாதிரி நடிகர்கள் புகைபிடிப்பதை விட்டு விட்டால் அனைவரும் புகைபிடிப்பதை நிறுத்தி விடுவார்கள் என்றும் சொல்லமுடியாது.
உதாரணமாக சில வருடங்களுக்கு முன் ரஜினி இனி திரையில் புகைப்பிடிப்பது போல வரும் காட்சிகளில் நடிக்கமாட்டேன் என்று அறிவித்தார். அவர் அப்படி செய்த உடனே புகை பழக்கம் உள்ள அவர் ரசிகர்கள் அனைவரும் இனிமேல் புகை பிடிக்கமாட்டேன் என்று அறிவித்தார்களா ? இல்லையே. அதனால் புகை பிடிப்பதும் பிடிக்காததும் அவரவர் விருப்பம். நடிகர்கள் செய்கிறார்கள் என்று யாரும் செய்வதில்லை பொதுவாக.
திரையில் செய்வதெல்லாம் நேரில் ரசிகர்கள் செய்வார்கள் என்ற வாதம் ஆதாரமற்றது. திரையில் கற்பழிப்பு காட்சிகள் நிறைய வருகிறது, அதை பார்த்து அதே மாதிரி எல்லாரும் செய்கிறார்களா? இல்லை திரையில் பறந்து பறந்து சண்டை போடுவது போல நேரில் யாராவது செய்கிறார்களா? இல்லவே இல்லை.
ஆகவே அன்புமணி ஐயா சொல்வது ஒரு சுய விளம்பரத்துக்காக என்று எனக்கு தோன்றுகிறது. அவருடைய நோக்கம் யாரும் புகை பிடிக்கக்கூடாது என்பது என்றால் ஏன் அவர் சிகரட், மது உற்பத்தி நிறுவனங்களுக்கு தடை போடக்கூடாது ? அதை செய்ய உங்களால் முடியுமா அன்புமணி அவர்களே ?
ஒரு நடிகர் திரையில் தோன்றும் போது காட்சியமைப்புக்காக புகை பிடிப்பதை போலவும் மது அருந்துவதை போலவும் காட்டுகிறார்கள். அது தப்பே இல்லை. சினிமா முழுதுமே பொய் அதில் அவர்கள் செய்வது மட்டும் உண்மை என்றால் அது என்ன நியாயம் ?
இந்த மாதிரியெல்லாம் தடை போட்டால் தமிழ் சினிமாவில் வசந்த மாளிகை, வாழ்வே மாயம் போன்ற படங்கள் வரவே வராது. ஆகவே இயக்குனர்களின் கற்பனைக்கு தடை போடுவதை அன்புமணி ஐயா நிறுத்தி கொள்வது நல்லது இல்லையென்றால் அவர் செய்வது ஒரு பப்ளிசிட்டி ஸ்டண்ட் என்று மக்களுக்கு தெரிந்துவிடும்.
நன்றி.
0 comments: to “ நடிகர்கள் திரையில் புகைபிடிப்பது சரியா ?? ”
Post a Comment