ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேறுமா ?
போன மாசம் முழுசும் இதே செய்தி தான் வலம் வந்து கொண்டிருந்தது. நடிகர்கள் முதல் அரசியல் கட்சிகள் வரை அனைவரும் இதை ஆதரித்தும் எதிர்த்தும் அங்கும் இங்கும் பிரசாரம் செய்து கொண்டிருந்தார்கள். இந்த திட்டம் இந்த ஜென்மத்தில் நிறைவேறுமா என்று ஒரு சிறிய அலசல்.
... இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் கலைஞரின் அலட்சியம். பத்து வருசத்துக்கு முந்தி கலைஞர் ஆட்சியில் இருந்த போதுதான் இந்த திட்டத்திற்கு கர்நாடக அரசு ஓகே சொன்னது. அப்பொழுதே நிறைவேற்றி இருந்தால் இப்போது இந்த பிரச்சனை வந்தே இருக்காது. அலட்சியத்துக்கு சொல்ல பட்ட காரணம் கஜானா காலி பணம் இல்ல திட்டதை நிறைவேற்ற என்பது தான். ஒரு ஆயிரம் கோடி தமிழ்நாட்டு கஜானால இல்லையா அப்போ ? நம்ப முடியல கலைஞர் அய்யா.
... சரி கலைஞர் ஆட்சி முடிஞ்சு அம்மா ஆட்சி வந்துச்சு, அவங்க இந்த திட்டத்தை வழக்கம் போல கிடப்பில் போட்டுட்டாங்க, ஒரே காரணம் அது கலைஞர் ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அவங்களாவது விழித்துக்கொண்டு திட்டத்தை நிறைவேற்றினார்களா என்றால் அதுவும் இல்லை.
... இப்போது கர்நாடக தேர்தல் நேரத்தில் கலைஞர் மறுபடியும் இதை தூசு தட்டினார். கர்நாடக வெறு வாய்களுக்கு அவுல் மெல்ல கொடுத்தார். மீதி நடந்தது அனைவருக்கும் தெரியும்.
... இப்போது இந்த திட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் எந்த அரசு அமைந்தாலும் நடக்க போவது இதுவே.
-> சட்ட மன்றத்தில் தீர்மானம் போடுவார்கள் திட்டத்தை நிறுத்த சொல்லி.
-> கேஸ் உச்ச நீதி மன்றம் போகும்
-> கொறஞ்ச பட்சம் ஒரு பத்து வருஷம் கேஸ் நடக்கும்
-> அப்புறம் தமிழகத்துக்கு ஆதரவா தீர்ப்பு வரும். பிரச்சனை நடக்கும் இங்க. தமிழர்கள் தாக்கப்படுவார்கள்.
-> திரும்ப கேஸ் நடக்கும்
ஆகவே திட்டம் நிறைவேற வாய்ப்பே இல்லை. கர்நாடக அவுல் திண்ணிகள் விட மாட்டார்கள்.
கலைஞரோ, ஜெயலலிதாவோ இந்த திட்டம் நிறைவேறும் பொது கண்டிப்பாக ஆட்சியில் இருக்க மாட்டார்கள். கலைஞரின் கொள்ளு பேரனோ, அம்மாவினால் வாரிசாக்கபட்டவர்களின் பேரன்களோ ஆட்சியில் இருப்பார்கள் என்பது என் தாழ்மையான கருத்து.
யாரும் ஏமாந்தவர்கள் இல்லை இந்த பிரச்சினையில், தர்மபுரி கிருஷ்ணகிரி மக்களை தவிர......
0 comments: to “ ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேறுமா ? ”
Post a Comment