Sunday, May 4, 2008

எம்.டி.வியின் அநாகரிகம்.  

தற்செயலாக எம்.டி.வி பார்க்க நேர்ந்தது. அதில் Roadies 5.0 என்ற ஒரு நிகழ்ச்சியை பார்த்தேன். அது ஒரு reality show. வெள்ளக்காறன பாத்து அதே மாதிரி நம்மூர் சேனல்கள் காப்பி அடிக்கும் இன்னொரு நிகழ்ச்சி. நான் பார்த்த போது தண்ணீரில் விளையாடும் ஒரு விளையாட்டை அதில் கலந்துகொண்டவர்கள் பண்ண வேண்டுமென்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சொல்ல்லி கொண்டிருந்தார். மூணு பொண்ணுகளும் ரெண்டு பசங்களும் இருந்தார்கள். சரி என்ன தான் பண்றாங்கன்னு பாப்போம்னு வெயிட் பண்ணேன் . அதில் கலந்துகொள்ள அந்த பெண்கள் போட்டிருந்த ஆடை என்ன தெரியுமா ? குட்டி பாவாடையும் மேல ஒரு துண்டு துணியும் தான். முழு தொடையையும் வயிரையும் காட்டி கொண்டு பப்பரபே என்று சிரித்தார்கள். ஒருங்கிணைப்பாளர் ஒரு கருப்பு கண்ணாடி போட்டு கொண்டு ரசித்து கொண்டிருந்தார். ஆண்கள் வெறும் ஜட்டி மட்டும் போட்டு வேற்று உடம்பை காட்டி கொண்டு இருந்தார்கள். இந்திய கலாச்சாரம் அங்கே சிரியாய் சிரித்து கொண்டிருந்தது. சியர் லிடர் பெண்கள் போடும் ஆட்டத்தை தடை செய்ய சொன்ன கலாசார பாதுகாவலர்கள் இப்போ எங்கோ போனார்கள் ? யாருக்கு தெரியும். வாழ்க கலாச்சாரம்.

அடுத்து ரம்பத்தில் பலகையை அறுக்கும் சவால். என்னன்னா ஒரு பலகையின் மேல போட்டியாளரை படுக்க வைத்து அந்த பலகையை இயந்திரம் கொண்டு அறுப்பார்கள். அப்போது போட்டியாளர் கை கட்ட பட்டிருக்கும். அந்த பலகையை மெஷின் அறுத்து முடிக்கறதுக்குள்ள கை கட்டை அவிழ்க்க வேண்டும். அதுதான் போட்டி. அப்போதும் அந்த பெண்கள் அதே ஆடை தான் அணித்து இருந்தார்கள் என்பது இங்கே முக்கியமான விசியம். அவர்கள் படுத்திருக்கும் போது அந்த மாதிரி குட்டி ஆடைகள் போட்டிருந்தால் எப்படி இருக்கும்.. மீதியை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன். எனக்கு வர்ணிக்க ஆசை தான் பெண் வாசகர்கள் கோபித்து கொள்வார்கள் அதனால் நீங்களே கற்பனை பண்ணிகொள்ளுங்கள். இதையெல்லாம் குழந்தைகள் ட்ரை பண்ண கூடாதுன்னு ஒரு வார்னிங் கூட போடலங்க.

என்ன கேக்க வரேன்னா இந்த மாதிரி தொலைகாட்சி நிகழ்ச்சியைஎல்லாம் யார் நெறியாள்கை(Moderate & Monitor) செய்கிறார்கள் ? எந்த ஹிந்தி சேனல் பாத்தாலும் ராக்கி சாவந்த் குட்டி பாவாடையுடன் கெட்ட ஆட்டம் போடுகிறார். அதோடு ஒப்பிட்டால் cheer leaders ஆட்டம் ரொம்ப கம்மி. தமிழ் சேனல்கள் மட்டும் சளைத்தவர்களா ? விஜய், சன், கலைஞர், ஜெயா என எந்த ஒரு சேனல்-உம் விதி விலக்கல்ல. எங்க பாத்தாலும் யாரோ ஒரு ஜட்ஜ் யாரோ ஒரு போட்டியாளருக்கு வித விதமாக தீர்ப்பு சொல்லிக்கொண்டே இருக்கிறார். வெறுத்து போச்சுங்க. அதே மாதிரி இந்த சீசன் 1, 2, 3 காமெடி நிகழ்ச்சிகள். கடியோ கடிங்க. இதையெல்லாம் மொதல்ல தடை பண்ணனுங்க.

என்ன பொறுத்த வரையில் நல்ல வித்யாசமான ஓரளவு பயனுள்ள ரசிக்கும் படியான நிகழ்ச்சிகளாக கீழ்க்கண்டவைகளை சொல்வேன்.
.... நாணயம் 1000 (சன் டிவி)
.... நீயா நானா (விஜய்)
.... தமிழ் பேச்சு எங்கள் மூச்சு (விஜய்)
.... இப்படிக்கு ரோஸ் (விஜய்)
.... லொள்ளு சபா (விஜய்)
.... பேச்சு பேச்சா தான் இருக்கணும் (ராஜ்)

எதுக்குமே புரயோஜனம் இல்லாத நிகழ்ச்சிகள்.
.... ஆடல் நிகழ்ச்சிகள் (எல்லாத்துலயும் தான்)
.... காமெடி நிகழ்ச்சிகள் (எல்லாத்துலயும் தான்)
.... படங்களை rating போடும் நிகழ்ச்சிகள் (எல்லாத்துலயும் தான்)
.... மெகா தொடர்கள் ( எல்லாத்துலயும் தான்)

ஸ்கின் ஷோ அதாவது தோலை காட்டுவது ஓரளவுக்கு ஓகே தான். ஆனா அதையே எந்நேரமும் காட்டி கொண்டே இருந்தால் கடுப்பு தான் வரும். சேனல் மூளைக்காரர்கள் புரிந்து கொள்வார்களா ? நல்ல தரமுள்ள அனைவரும் குடும்பத்தோடு உக்காந்து பாக்கற மாதிரி நிகழ்ச்சிகள் மட்டும் வந்தால் எவ்ளோ நல்லா இருக்கும்? ஸ்கின் ஷோ நிகழ்ச்சிகளுக்கென்று தனியாக ஏன் சேனல் தொடங்க கூடாது ? அப்படி பண்ணிட்டா பெற்றோருடன் டிவி பாக்கும் போது நல்ல சேனல் களும் அவர்கள் இல்லாத போது ஸ்கின் ஷோ சேனல் களும் பார்ப்பார்களே வயசு பசங்கள். எப்படி ஐடியா ?

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories



2 comments: to “ எம்.டி.வியின் அநாகரிகம்.