Thursday, May 1, 2008

பங்குகள் ஒரு அறிமுகம் - பகுதி 1 .  

நண்பர்களே நான் முன்னமே சொன்ன மாதிரி ஸ்டாக் மார்க்கெட் பத்தி அடிக்கடி பேசுவோம், அந்த வரிசையில் இன்று ஸ்டாக் பற்றி ஒரு அறிமுகம். இந்த கட்டுரை ஸ்டாக் மார்க்கெட் பற்றி எதுவுமே தெரியாதவர்களுக்கு ஓரளவுக்கு உதவி செய்யும் என்று நம்புகிறேன்.

ஸ்டாக் என்றால் என்ன ?
..... ஸ்டாக் என்றால் ஷேர், அதாவது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் பங்குதாரர். நீங்கள் எவ்வளவு ஷேர் வாங்குகிறீர்களோ அந்த அளவுக்கு அந்த நிறுவனத்தில் நீங்கள் பங்குதாரர். என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா ? ஆம். உதாரணமாக நானும் நீங்களும் சேர்ந்து ஒரு நிறுவனம் ஆரம்பிக்கிறோம் என்று வைத்து கொள்ளுங்கள். கூட்டு நிறுவனத்துக்கு தேவையான மொத்த முதலீடு ஒரு லட்சம். நான் 25 ஆயிரம் போடுகிறேன் நீங்கள் மீதி 75 ஆயிரம் போடுகிறீர்கள் என்று வையுங்கள். இப்போ அந்த நிறுவனத்தில் யாருக்கு மதிப்பும் முடிவெடுக்கும் அதிகாரமும் அதிகம் ? அதிக பணம் போட்ட உங்களுக்கு தானே. இப்போது நான் இன்னும் கொஞ்சம் அதிகம் பணம் போட்டு அதாவது இன்னும் 25 ஆயிரம் போட்டால் இருவரும் சம உரிமை உள்ள உரிமையாளர் ஆகிவிடுவோம். இந்த கோட்பாட்டின் அடிப்படையில் தான் முழு பங்கு சந்தையும் இயங்குகிறது.
நீங்கள் ஒரு நிறுவனத்தில் 51 விழுக்காடு பங்கு வாங்கி விட்டால் நீங்கள் சொல்லாமல் அந்த கம்பெனியில் எதுவும் நடக்காது. நீங்கள் கம்பெனி ஓனர் ஆகி விடுவீர்கள். நீங்கள் வைத்திருக்கும் பங்கு அளவை பொறுத்து உங்கள் பவர் அதிகரிக்கும் அந்த நிறுவனத்தில்.

பங்கு விற்பனை எப்படி நடை பெறுகிறது ?
..... இந்தியாவில் இரண்டு பெரிய exchanges உள்ளன. Bombay Stock Exchange(BSE) and National Stock Exchange(NSE). பாம்பே மற்றும் தேசிய பங்கு சந்தைகள். இவர்களை கட்டு படுத்த Securities and Exchange Board of India (SEBI) உள்ளது. இந்த பங்கு சந்தைகள் மூலமாகத்தான் நாம் பங்குகளை வாங்கவோ விற்கவோ முடியும். பங்கு விற்பனை Demand - Supply என்ற கோட்பாட்டின் படி இயங்குகிறது. நீங்கள் ஒரு நிறுவனத்தின் பங்குகளை ஒரு குறிப்பிட்ட விலையில் வேண்டும் என்று சொன்னால் அதை நீங்கள் பெற நீங்கள் கேட்க்கும் விலையில் விற்க யாராவது தயாராக இருக்க வேண்டும். இது தான் அடிப்படை.

நிதி திரட்டல் என்றால் என்ன ?
..... எந்த ஒரு நிறுவனத்துக்கும் வளர்ச்சி தான் முக்கியம், அது இல்லையென்றால் தொழில் நடத்த வேண்டிய அவசியமே இல்லை. சிலர் இருப்பதே போதும் என்று இருப்பார்கள். அப்படி இருப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு மேலே போக முடியாது. போதும் என்று அம்பானி நினைத்திருந்தால் இவ்வளவு பெரிய ரிலையன்ஸ் சாம்ராஜ்யம் வந்தே இருக்காது. So வளர்ச்சி தான் முக்கியம் அது மூளையானாலும் எதோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு கம்பெனி ஆனாலும்.. சரி எப்படி நிறுவனத்தை வளர்ப்பது ? தண்ணி ஊத்தி மரத்தை வளர்க்கற அதே Technique தான். கம்பெனி வளர மிக முக்கியம் நிதி ஆதாரம் மற்றும் தெளிவான நிர்வாக அணுகு முறைகள்.
நிதி திரட்ட நிறைய வழிகள் இருக்குது, அதுல சில.
.. கடன் வாங்கி தொழிலை விரிவு படுத்துவது.
.. கைமாத்து வாங்குவது.
.. சொத்துக்களை விற்று நிதி ஆதாரத்தை பெருக்குதல்.
.. மாமனாரிடம் மிரட்டி வாங்குவது
.. பங்கு சந்தையில் நிதி திரட்டுதல்.

இதுல எது ரொம்ப சுலபம். சொல்லுங்க பாப்போம். It depends on person to person. ஆனால் நிதி திரட்ட உலக அளவில் அனைத்து நிறுவனங்களும் பின்பற்றும் மிக முக்கிய வழி பங்கு சந்தை தான். நிதி திரட்ட வேண்டுமானால் அதற்கு முதலில் நிறுவனத்தை பப்ளிக் கம்பெனி ஆக மாற்ற வேண்டும், அதற்கு Initial Public Offering (IPO) என்று பெயர். ஒரு நிறுவனம் பப்ளிக் லிமிடெட் ஆனால் நிறைய நல்லது கெட்டது இருக்கிறது. அது இப்போதைக்கு வேண்டாம். பிறகு பார்ப்போம். ஆனால் அதன் மூலம் நிதி திரட்டி கம்பெனியை வளர்க்கலாம் என்பது மிக முக்கிய கருத்து இங்கே. எப்படி என்றால் உங்கள் நிறுவனத்தின் குறிப்பிட்ட அளவு பங்குகளை நீங்கள் வெளி ஆட்களுக்கு விற்று அதன் மூலம் வரும் பணத்தை கொண்டு நிறுவனத்தை வளர்க்கும் திட்டங்களை நிறைவேற்றலாம். இதன் மூலம் உங்களுக்கு எந்த விதமான பாதிப்பும் வராது Because நீங்கள் அனைத்து பங்குகளையும் வெளி ஆட்களுக்கு விற்கவில்லை. ஒரு குறிப்பிட்ட பங்குகளை மட்டுமே விட்கிறீர்கள். அதனால் முடிவெடுக்கும் அதிகாரம் உங்கள் கையில் தான் இருக்கும். புரிகிறதா நண்பர்களே ?

சென்செக்ஸ் மற்றும் நிப்டி என்றால் என்ன ?
..... சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும் புகழ் பெற்ற இண்டெக்ஸ் கள் அல்லது List of companies from different sectors. இந்த புள்ளிகளின் அடிப்படையில் தான் நாட்டோட வளர்ச்சி கணக்கிடப்படுகிறது. இதில் இடம் பெரும் கம்பெனிகள் எல்லாமே மிக பெரியவை. அவரவர் துறையில் பெரியவர்கள். இவர்களின் வளர்ச்சியை கொண்டே ஒட்டு மொத்த துறையின் வளர்ச்சி கணக்கிடப்படுகிறது. இப்போ சென்செக்ஸ்ய் எடுத்து கொள்வோம், அதுல 30 ஸ்டாக் இருக்கு. இப்போ அந்த குறிப்பிட்ட 30 ஸ்டாக் உம் விலை அதிகம் ஆனால் சென்செக்ஸ் ம் பச்சையில் முடியும் அப்படின்னு இப்போதைக்கு தெரிஞ்சு வெச்சுக்கோங்க. பின்னாடி விளக்கமா பாப்போம்.

பங்குகளை வாங்க தனி நபர் என்ன செய்ய வேண்டும் ?
..... முதலில் Demat கணக்கு வேண்டும். இதன் மூலம் தான் பங்குகளை வாங்கி வைத்திருந்து விற்க முடியும். இது ஒண்ணும் ராக்கெட் சயின்ஸ் இல்லை. இது வெறும் எண் தான். இதை நீங்கள் நிறைய புரோக்கர் மூலமாக பெற முடியும். ஆனால் தற்போது ஆன்லைன் ஷேர் பரிவர்த்தனை ரொம்ப பிரபலம், icicidirect.com போன்ற நிறைய ப்ரோக்கர்கள் இணைய தளம் வழியாக ஷேர் வாங்கி விற்கும் வசதியை தருகிறார்கள். நீங்கள் சாப்ட்வேர் துறையில் இருந்தால் இந்த மாதிரி இணைய தளத்தில் உறுப்பினர் ஆவது நல்லது.

அறிமுகம் போதும்னு நெனக்கறேன்.

மீண்டும் சந்திப்போம் நண்பர்களே.

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories



2 comments: to “ பங்குகள் ஒரு அறிமுகம் - பகுதி 1 .