தமிழில் திரைப்படங்களுக்கு பெயர் வைத்தால் வரிவிலக்கு என்ற திட்டம் தேவையா ?
தமிழக முதல்வருக்கு ஒரு கடிதம்.
.......................................................................
முதல்வர் அவர்களுக்கு வணக்கம், தங்களின் ஒரு திட்டமான "தமிழில் திரைப்படங்களுக்கு பெயர் வைத்தால் வரி விலக்கு" என்ற திட்டம் குறித்து எனக்கு சில கருத்து முரண்பாடுகள் உள்ளன. அவற்றை கீழே கொடுத்துள்ளேன்.
.. கோடிக்கணக்கில் பணம் புரளும் சினிமா துறைக்கு இந்த மாதிரி வரிவிலக்கு தேவையா ? அதுவும் தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்பது தேவையா ? இப்படியெல்லாம் தமிழை வளர்க்க முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா ?
.. சினிமா துறை ஒன்றும் நலிந்து போய் கிடைக்கவில்லை. அவர்கள் எடுக்கும் மோசமான படங்கள் ஓடாததால் சினிமா துறையே நலிந்து போய் கிடக்கிறது என்று சொல்வது முட்டாள் தனம் என்பது என் கருத்து.
.. பல துறைகள் நலிந்து போய் கிடக்கிறது, உதாரணமாக விவசாயம், மற்றும் நெசவு. சினிமா துறைக்கு காட்டும் கருணையை மறற துறைக்கும் காட்டுங்கள். சினிமா துறைக்கு நீங்கள் இவ்வளவு நீங்கள் சலுகை செய்ய காரணம் நீங்கள் ஒரு சினிமா ரசிகர் என்பதாலா அல்லது சினிமா துறையினரை பிரச்சார சமயத்தில் இழுக்க இப்பொழுதே அடி போடும் ஒரு முயற்சியா ? சினிமா துறையினரின் பிரச்சாரம் பல சமயத்தில் எடுபடாது என்பது உங்களுக்கு தெரியாதா என்ன. உதாரணம் சிம்ரன் அவர்கள் "Vote for 2 leaves" என்று அழகாக இடுப்பை காட்டி வோட்டு கேட்டும் மக்கள் வேட்டு வைத்தது உங்களுக்கு மறந்து போச்சா ? ஆகவே சினிமா துறைக்கு கொடுக்கப்படும் அனைத்து சலுகைகளையும் நிறுத்துங்கள். முடிந்தால் இன்னும் வரியை அதிகப்படுத்தி அரசுக்கு அதிக வருமானம் கிடைக்க வழி செய்யுங்கள். சினிமாகாரர்கள் போராடுவார்கள், போராடட்டும் விடுங்கள். படமே எடுக்க போவதில்லை என்று அவர்கள் முடிவு செய்தாலும் கவலை இல்ல, ஆங்கில மற்றும் ஹிந்தி படங்களை பார்ப்போம். நீங்கள் கவலை கொள்ள வேண்டாம்.
நீங்கள் அனைத்து வரிகளும் அதிகபடுத்தினால் தான் அவர்கள் சிக்கனமாக நல்ல கதைஅம்சமுள்ள படங்கள் எடுப்பார்கள். நடிகர்களுக்கு கொடுக்கும் சம்பளமும் குறையும். கொஞ்சம் திமிரும் குறையும் எல்லா நடிகர்களுக்கும்.
நீங்கள் வரி விலக்கு கொடுத்து தான் தீருவேன் என்றால் கீழ்க்கண்ட வழிகளில் கொடுங்கள்.
... தமிழில் பெயர் வைக்காவிட்டால் இரட்டை வரி (இரு மடங்கு வரி), தமிழில் பெயர் வைத்தால்தான் சாதாரண வரி.
.. படங்களில் வரும் பாடல்கள் அனைத்தும் பிறமொழி கலப்பில்லாமல் தமிழில் இருக்க வேண்டும். அப்படி இல்லையெனில் இரட்டை வரி. எல்லா பாடல்களும் பிறமொழி கலப்பில்லாமல் இருந்தால் சாதாரண வரி. இப்படி செய்தால் தமிழ் வளர நிறைய வாய்ப்பிருக்கிறது.
.. ஆபாசமான வரிகளுடன் பாடல் இருந்தால் இரட்டை வரி . இல்லையென்றால் சாதாரண வரி.
.. படம் முழுதும் பிற மொழி கலப்பில்லாமல் வசனம் தமிழில் மட்டும் இருந்தால் 20 % வரிவிலக்கு.
மேல சொன்ன திட்டங்களை நீங்கள் அமுல்படுத்தினால் அரசின் வருமானமும் உயரும், நல்ல சினிமாவும் வரும், தமிழும் வளரும்.
ஆகவே, தாங்கள் இந்த கருத்துகளை சிறிது கவனிக்க வேண்டுகிறேன்.
நன்றி.
0 comments: to “ தமிழில் திரைப்படங்களுக்கு பெயர் வைத்தால் வரிவிலக்கு என்ற திட்டம் தேவையா ? ”
Post a Comment