தசாவதாரம் பாடல் அலசல்...
நானும் அலச போகிறேன் சினிமாவையும் அதன் பாடல்களையும் கால் மேல் கால் போட்டு ஒக்காந்து .... மொதல்ல தசாவதாரம் இசை அலசல் இங்கே. பாட்ட கேட்டு பாத்துட்டு நீங்களும் நான்சொல்றது ஒரு 75% சரியா இருக்குன்னு உங்களுக்கு தோணினா எனக்கு வெற்றி தான். அப்போ தான் எனக்கும் காது நல்ல கேக்குதுன்னு அர்த்தம். ஆகவே நண்பர்களே படிங்க பாட்ட கேளுங்க, கருத்த சொல்லுங்க....
அதுக்கு மொதல்ல இசை அமைப்பாளர் ஹிமேஷ் ரேஷ்மையா பத்தி கொஞ்சம் பாப்போம், இவரோட செல்ல பேரு மூக்கு பாடகர் அல்லது நாசி பாடகர். இவரோட எல்லா ஹிந்தி பாடல்களும் பெரிய ஹிட். இப்போ ஹீரோவாகவும் மக்களை குஷி படுத்துகிறார். ஹிந்தி படங்களில் வரும் pub டான்ஸ் பாடல்களுக்கு இசை அமைப்பதில் இவர் கில்லாடி. தமிழ்ல இவரு எப்படி சாதிக்க போராருன்னு போக போக தெரியும். கொஞ்சம் சந்தேகம்தான். பாப்போம்.
முதல் பாடல், முகுந்தா முகுந்தா........
வாலி பின்னி எடுத்துட்டார், ஆனா என்ன கொஞ்சம் சாமி பாட்டு மாதிரி இருக்கு ரொம்பவே... இசையும் குரலும் நல்ல தேர்வு. சாதனா சர்கம் சூப்பர். கடைசில வர கீச்சு குரல் கமலோடது. நம்பவே முடியல. நல்ல முயற்சி கமல்...
ரெண்டாவது பாடல், கல்லை மட்டும் கண்டால்........
ரொம்ப அர்த்தம் உள்ள பாட்டு, வரிகள் மிக அருமை. ஹரிஹரன் குரலில் கேட்பதற்கு ரொம்ப சுகமாக உள்ளது. சில வரிகள் புரியவில்லை.
மூணாவது பாட்டு, உலக நாயகனே ........
ஆழ்வார் பேட்டை ஆண்டவா, சகலகலா வல்லவனே... மாதிரி இதுவும் துதி பாடல்.. ஆனா கேக்கற மாதிரி இருக்கு.. வினித்தின் மென்மையான குரல் நல்ல தேர்வு .. கமல் ரசிகர்களை குஷி படுத்த சேர்க்கப்பட்ட இடைச்செருகல்.
நாளாவது பாட்டு, கா கருப்பனுக்கும் .......
வைரமுத்து ஐயா எழுதினது, pub பாட்டு. இடை இடையே ஆபாசம் இருக்கும் வரிகள்ல. தீர்த்தம் கொடுன்னு ரொம்ப ஆசையா கேக்கறாங்க, அப்புறம் ட்வின் டவர் சாஞ்சாலும் இவங்க டவர் சாயாதாம். ஐயா வைரமுத்து பின்னி எடுத்துடீங்க. பாமரனுக்கும் புரியும் இந்த பாட்டின் சில வரிகள், இந்த வரிகளுக்கு உண்மையான அர்த்தத்தை எண்ணி ரசிகர்கள் சந்தோஷத்தில் திளைப்பார்கள் என்பது வைரமுத்துவின் அசைக்கமுடியாத நம்பிக்கை.
அஞ்சாவது பாட்டு, ஒ.. சனம் ......
நல்லா இருக்கு கேக்கற மாதிரி, வரிகளும் இசையும் பொருந்தி போகுது. 'கடவுளும் கந்தசாமியும் பேசிக்கொள்ளும் மொழி பாடல்தான்' அப்படிங்கற வரி அருமை...
மொத்தத்துல பரவால. மூணு பாட்டு கேக்கற மாதிரி இருக்கு. மத்த ரெண்டும் ( கா கருப்பன்.. மற்றும் உலக நாயகனே ) சுமார் ரகம்.....
0 comments: to “ தசாவதாரம் பாடல் அலசல்... ”
Post a Comment