ஜாக்கி சானின் அவதாரமும், கெட்ட ஆட்டமும்...
சமீபத்தில் என்னை கவர்ந்த சினிமா நிகழ்ச்சி தசாவதாரம் பாடல் தகட்டை ஜாக்கி சான் வெளியிட்டது தான். ஜாக்கி மாதிரி ஒரு ஸ்டார கூட்டிட்டு வரது ஒரு நல்ல வியாபார யுக்தி, மாய சினிமா உலகில் லாபம் சம்பாதிக்க இந்த மாதிரி ஆடம்பரம் எல்லாம் தேவை தான். அவர் வந்த தால படத்துக்கான visibility கொஞ்சம் ஜாஸ்தி ஆயுருச்சு. பாப்போம் படம் ஆப்பு அடிக்காம இருந்தா சரி.
ஜாக்கி சானிடம் உள்ள சில நல்ல குணங்களை விழா மேடையில் பார்த்தோம். பேப்பர் பொறுக்கியது, எப்போதும் சிரித்தது, எதுவுமே புரியாவிட்டாலும் பிரபலங்கள் வாரி வழங்கிய மொக்கை பாராட்டுக்களை ஏற்று கொண்டது அவற்றுள் சில. அவருக்கு மட்டும் ஐந்து கோடியாம் !! கமல் கடுப்பில் இருப்பதாக குமுதம் சொன்னது. Because முழு ரெண்டு வருஷ உழைப்புக்கே கமலுக்கு அவ்வளவுதான் கெடச்சுதாம் (நம்ப முடியல !) . ஜாக்கி சும்மா வந்து, ஸ்டார் ஹோட்டல் ல ஒக்காந்துட்டு, கொஞ்சம் நேரம் சிரிச்சிட்டு போனதுக்கு அஞ்சு கோடியா (take home) ? .
ஜாக்கி வரவு படத்தை ஜாக்கி போட்டு தூக்கி நிறுத்தும்கறது தயாரிப்பாளரின் நம்பிக்கை. ஆனா நல்லா கதையும், அதுக்கேத்த நிதானமான நடிப்பும், support பண்ண கூடிய இசையும், நல்ல ஒலி ஒளி பதிவும், வசனமும், தொய்வில்லாத நல்ல கத்திரி வேலையும், இவர்களை கட்டி மேய்க்க நல்ல இயக்குனரும் இருந்தால் மட்டுமே படம் ஜெய்க்கும். நடிகர்கள் வெறும் ஒரு வாரத்துக்கு வேண்டுமானால் ரசிகர்களை கூட்டிட்டு வர முடியும், after that நல்ல கதை தான் ரசிகர்களை கூட்டிட்டு வரும். சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி, ஆனா நடிகர்களுக்கு மட்டும் தான் கெடக்குது ஓவர் புகழ்ச்சி. நல்ல கதை இல்லாம யார் நடிச்சாலும் படம் ஓடாது இது கமலுக்கும் பொருந்தும்.
இந்தியன் பிரிமியர் லீக் நால தான் படம் ரிலீஸ் தள்ளி போயிருச்சாம். தயாரிப்பாளரின் கவலை நியாயம். Cheer leaders போடும் கெட்ட ஆட்டம் பார்த்தால் பல மல்லிகா செராவத் பாடல்களை பார்த்த 'திருப்தி' ரசிகன் முகத்தில்(நானும்தாங்க ரசிக்கறேன்) கிரிக்கெட் எல்லாம் ரெண்டாம் பட்சம் தான்.
கிரிக்கெட்டும் சினிமாவும் ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள். கொஞ்ச நாள்ல ரெடி கேமரா ஆக்சன் சொல்லி கிரிக்கெட் மேட்ச் ஆரம்பிக்க ஐநா சபையில் திட்டம் ரெடி என்று சுப்ரமண்யம் சுவாமி சொன்னார் (எங்கிட்ட மட்டும்). மக்களை குஷி படுத்துவது தான் T20 கிரிக்கெட்டின் கொள்கை என்று யாரோ காற்றில் சொன்னது காதில் விழுந்தது. அப்படியே கொள்கை ரீதியான கூட்டணியாக அது சினிமாவுடன் கூட்டு சேர்ந்து மக்களை குஷி படுத்து குட்டி கரணம் போடுகிறது. அக்ஷய் குமார் போட்டாரே மைதானத்தில் அது மாதிரி.
என்ன பொருத்த வரைக்கும் மெகா சீரியல் பாத்து கண்ணீர் விடும் இளகிய மனம் கொண்ட குடும்ப தலைவிகள் இந்த மாதிரி நிகழ்ச்சிகளை பார்க்க எதாவது 'மருத்துவர்' பரிந்துரை செய்யலாம்.
நண்பர்கள் சிலருக்கு கிரிக்கெட் பிடிக்காது. சச்சினும் அவர் சகாக்களும் இவ்ளோ பணம் பெற தகுதி உள்ளவர்களா என்று கேட்பார்கள் அவர்கள். அப்போதெல்லாம் நான் சினிமா பிரபலங்களின் பெயரை சொல்லி, அவர்கள் இவ்வளவு சம்பாதிக்க தகுதி உடையவர்களா என்று கேப்பேன். அப்படியே விவாதம் நடக்கும் நடக்கும் நடக்கும் முடிவே இல்லாமல். கடைசியில் எதாவது ஒரு செய்தி சேனல் போட்டு பேச்ச முடிச்சுருவோம்.
எப்படியோ நேரம் போனா சரி......... எனக்கும் என் நண்பர்களுக்கும் மக்களுக்கும்........
0 comments: to “ ஜாக்கி சானின் அவதாரமும், கெட்ட ஆட்டமும்... ”
Post a Comment