Thursday, May 1, 2008

பெங்களூர் வாழ்க்கை......  

நண்பர்களே, என்னோட மூணு வருஷ பெங்களூர் அனுபவத்த உங்களோட பகிர்ந்து கொள்ள எனக்கு ரொம்ப ஆசை. அந்த ஆசை இப்போ நிறைவேருது....

பெங்களூர் என்ன பொறுத்த வர பெண்களூர். Because எங்க பாத்தாலும் பொண்ணுக தான் கலர் கலர் டிரஸ் போட்டுட்டு சுத்தறாங்க. சில நேரங்களில் அரை நிர்வாணமா சுத்தறாங்க. இந்த நகரம் ஒரு கலாச்சார சீர்கேட்டுக்கு முன்னுதாரணம். எல்லாம் பாத்து பாத்து போரடிசுருச்சு அதான் கலாச்சாரம் பத்தி பேச வேண்டிய கட்டாயம் எனக்கு. இந்த ஊருக்குன்னு ஒரு தனிப்பட்ட கலாச்சாரம் கெடயாது. இங்க இருக்கற பாதி பேரு தமிழ், மீதி ஹிந்தி, மலையாளம், தெலுங்கு பேசற மக்கள். இப்படி பல மொழி பேசற மக்கள் இருக்கறதால இந்த ஊரோட Individuality போச்சு. இந்த ஊரு மக்கள் டிராபிக் ஜாம்ள மாட்டி முழி பிதுங்கி சாகறாங்க. குமாரசாமியும் எட்டியுரப்பாவும் இதையெல்லாம் கவனிக்க போவதில்லை என்று சபதம் போட்டிருப்பதாக கேள்வி . நாம என்ன பண்ண, நாமளே இங்க நாடோடிகள். ரொம்ப பேசினா அடிதான்.

பத்து வருசத்துக்கு முன்னாடி எல்லாம் காடு மாதிரி இருந்த ஊராம். 95 ஆம் ஆண்டுக்கு முன்னால் இப்போ நாங்க இருக்கற பகுதியில எல்லாம் கொய்யா தோப்பாம். கேள்வி பட்டேன். அப்படி இருந்த ஊரு இப்போ எங்க பாத்தாலும் வண்டி, டிராபிக், புகை. அவ்ளோ தான்... அத தவிர இந்த ஊர்ல ஒன்ணுமே இல்லங்கற மாதிரியான எண்ணம் எனக்கு அடிக்கடி வரும்.

இவ்வளவு மாற்றம் இந்த ஊருக்கு வர காரணம் சாப்ட்வேர் ன்னு எல்லாருக்கும் தெரியும். அப்படியே drastic மாற்றம் குறுகிய காலத்துல. அதனால தான் இவ்ளோ டிராபிக் வர காரணம். இங்க இருக்கற அடிப்படை கட்டமைப்புகள் 10 ஆண்டுகள் முன்னால் இங்கே இருந்த மக்கள் தொகையின் அடிப்படையில் உள்ளது. அது தான் பிரச்சனை. இப்போ எல்லாமே கஷ்டம், ரோடு போடவும் முடியாது, மக்கள் ஆபீஸ் போகவும் முடியாது. எங்க எடம் இருக்க ரோடு போட ??

நாம ஒண்ணும் பண்ண முடியாது, பேசாம ஊர காலி பண்ணிட்டு சென்னை, கோயம்புத்தூர் மாதிரி எங்கயாவது போறது ரொம்ப நல்லது. கோயம்புத்தூர், சென்னையும் இதே மாதிரி ஆகும் சரியா பிளான் பண்ணாம விட்டா. தமிழக ஆட்சியாளர்கள் இப்போதே விழித்துக்கொள்வது நல்லது. பாப்போம்.

இன்னும் நிறைய விசியங்கள் இருக்கு இந்த ஊர பத்தி பேச. ஒவ்வொன்னா பாப்போம்..
...... ஓரளவுக்கு நல்ல வானிலை வருடம் முழுதும், இந்த வருஷம் பயங்கர வெய்யில். தாங்க முடியல. சென்னை மாதிரியே இருக்கு. வருஷா வருஷம் 2 டிகிரி அதிகம் ஆகுதாம். அதை நல்லாவே உணர முடியுது. போன வருஷம் வெயிலே இல்ல. இந்த வருஷம் ரொம்ப கஷ்டம்ங்க. தினக்கூலிக்கு போறவங்களுக்கு தான் ரொம்ப கஷ்டம். நாமெல்லாம் அதிர்ஷ்டகாரர்கள். அதை இந்த வெயிலால் மறுபடி உணர்ந்தேன் நான்.
...... தண்ணீர் பிரச்சனை இல்லவே இல்ல. இங்குள்ளவர்கள் தண்ணீரை அதிகம் வீணாக்குகிறார்கள். கொஞ்சம் சிக்கனமாக செலவு பண்ணி அதை தமிழக அல்லது கர்நாடக விவசாய்கள் பயன்படுத்த தந்தால் விவசாய உற்பத்தி இன்னும் கொஞ்சம் அதிகம் ஆகும். பண வீக்கம் பற்றி கால் மேல் கால் போட்டு புலம்பிக்கொண்டு இருப்பது கொஞ்சம் குறைய வாய்ப்பிருக்கிறது. நண்பர்களே நாமும் கொஞ்சம் சிக்கனமாக தண்ணீரை செலவு பண்ணுவோம். காவிரியை நம்பியுள்ள குடியானவர்களை எண்ணி பார்ப்போம்.
...... தமிழர்களுக்கு இங்கே ஒருவித பாதுகாப்பின்மை இருப்பது உண்மை. அதுக்கான காரணம் உங்க எல்லாருக்கும் நல்லாவே தெரியும். காவிரியும் அது சார்ந்த கிளை பிரச்சனைகளும் தான் இங்க இருக்கற சில முன்னேற துடிக்கும் அரசியல்வாதிகளுக்கு வரப்ப்ரசாதமாக இருக்கிறது. அந்த பிரசாதத்தை அனைத்து அரசியல் வாதிகளும் முடிந்த வரை உண்டு வருகிறார்கள். அளவுக்கு மீறி பிரசாதம் உண்டால் சில பல 'பின்' விளைவுகள் உண்டாகும் என்பது இங்கிருப்பவர்கள் கூடிய சீக்கிரம் புரிந்து கொள்வார்கள். கர்நாடக மக்கள் நல்லவர்கள் பொதுவாக, அவர்கள் உணர்வை தூண்டி அதில் அரசியல் செய்வது இங்குள்ள அரசியல்வாதிகள் தான். கர்நாடக தோழர்களே, எது நல்லது என்று நீங்கள் முடிவெடுக்க நேரம் வந்துவிட்டது. சிந்தியுங்கள். தமிழர்களை நிம்மதியாக இங்கே வாழ விட உதவுங்கள்..
...... பொழுது போக்குக்கு இங்கே இடங்கள் ரொம்ப குறைவு, அந்த சோகத்தை pub களில் போக்கி கொள்ள சொல்லி அரசு உத்தரவு வந்திருப்பதாக கேள்வி. நான் கேள்விப்பட்ட பெங்களூர் இரவு வாழ்வை பற்றி இன்னொரு நாள் விரிவா பாப்போம். ஆர்வத்தை அடக்கி கொள்ளுங்கள் நண்பர்களே.....

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories2 comments: to “ பெங்களூர் வாழ்க்கை......

 • Anonymous
  May 13, 2008 at 6:22 PM  

  Unga kita ivlo thira ma erukunu sonapo kuda konjam doubt ipo ila..
  romba nalla yeluthuringa

  Nalla Karuthukal..
  But yengayavathu adivangu veengalo nu bayamaruku :)

  But Overall Your Script is so simple.. and it makes others to think..

  Keep Going...Periya author aana udane dont forget us muruhanantham..

  Prabhakar

 • Muruhanantham. C
  May 13, 2008 at 6:54 PM  

  Bayapadadeenga naa avlo mosamavellam eludhi adiyellam vaanga maatean. Im completely aware of my limit. :)

  periya author ellam illenga.. naane oru kathukutti. innum kathukka neraya irukkunga..

  commentkkukku nandri. urs is the first comment in my blog :)

  thanks