Saturday, May 3, 2008

வோடாபோன் நாய் குட்டியும், விலங்குகள் நல வாரியமும்.....  

நேற்று ஒரு செய்தி, வோடாபோன் நாய் குட்டி விளம்பரத்தை தடை செய்ய வேண்டும் என்று விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு வழக்கு பதிவு செய்து இருப்பதாக தெரிகிறது. இதை கேள்வி பட்டதும் எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. அதுக்கு அவர்கள் சொன்ன காரணம் "அந்த நாயை கொடுமை படுத்தி நடிக்க வைத்திருக்கிறார்களாம், அப்புறம் எந்த ஒரு நாயும் பஸ் பின்னால் தானாக ஓடதாம் , அதை கட்டாய படுத்தி ஓட வைத்திருக்கிறார்களாம். " காரணம் எப்படி இருக்கு ? சூப்பர் ல. ஒக்காந்து யோசிப்பாங்களோ காரணம் தேடி.

விலங்குகள் அமைப்புக்கு சில கேள்விகள்... பதில் வராவிட்டாலும் கேள்வி கேட்பது தான் இந்த ப்ளாகின் நோக்கம்.
.... நீங்க சொல்ற மாதிரி நாய கட்டாய படுத்தி ஓட வெச்சுருந்தா அது அவ்ளோ சந்தோசமா ஓடுமா ?
.... கட்டாய படுத்தி ஓட வெச்சாங்கன்னு உங்ககிட்ட என்ன ஆதாரம் இருக்கு ?
.... இவ்ளோ நாளா எங்க போனீங்க ? இதே விளம்பரம் கிட்டத்தட்ட மூணு மாசமா வருது. திடீர் நனோதயம் ஏன் ?
.... இதுக்கு முன்னாடி ஹட்ச் விளம்பரத்துல கூட இதே நாய் தான் வந்துச்சு.. அப்போ ஏன் கேஸ் போடல ? அப்போ தூங்கிட்டா இருந்தீங்க ?
.... இது யாரோ தூண்டி விட்ட மாதிரி இருக்கு. ஆனா ஒன்ன மட்டும் சொல்றேன். அந்த விளம்பரத்துக்கே செம விளம்பரம் தேடி தந்துடீங்க. இனிமே தான் அந்த விளம்பரத்தோட reach அதிகம் ஆகும்.
.... என்ன பொறுத்த வரையில் நாயின் முன்னாடி எலும்பு துண்ட காட்டி தான் ஓட வச்சுருப்பாங்கன்னு சொல்வேன், அது ஓடற சந்தோசத்த பாத்தா அப்படி தான் இருக்கு.
.... இப்போ நீங்க கேஸ் போட்டது எலும்பு துண்ட காட்டி ஓட விட்டு அப்புறம் குடுக்காம ஏச்சு புட்டாங்கன்னு அந்த நாய் உங்க கிட்ட வந்து சொன்னதாலா ? இல்ல அப்படி குடுக்காம விட்டுட்டோம்னு அந்த விளம்பரத்தை எடுத்தவங்க வந்து உங்க கிட்ட தன்னிலை விளக்கம் குடுக்காம விட்டதாலா ?
.... இது எனக்கு ரொம்ப வித்யாசமா இருக்கு, அந்த விளம்பரம் பாத்தாலே ஒரு வித புத்துணர்ச்சி வருவது உண்மை. Its a refreshing ad..

அப்புறம் இந்த மாதிரி மொக்க கேஸ் போட்டு கற்பனைய கட்டி போடாதீங்க. நீங்க இந்த விளம்பரத்துக்கு தடை வாங்கிட்டா ஊருல இருக்கற தெரு நாய் தொல்லை நின்று விடுமா ? எந்த ஒரு நாயும் பஸ் பின்னாலோ சைக்கிள் பின்னாலோ ஓடாதா ? இதெல்லாம் நடக்கும்னு உங்களுக்கு உறுதியா தெரியும்னா தடை வாங்குங்க.

இதே மாதிரி தான் இம்சை அரசன் படத்துக்கு கேஸ் போட்டாங்க. காரணம் - குதிரை மேல ஏறி சவாரி செய்தாராம் வடிவேலு. என்னங்க இது சின்ன புள்ள தனமா இருக்கு ராஜா குதிரைல போகாம பின்ன எப்படி போவாரு. FYI அந்த காலத்துல வண்டி வாகனம் எல்லாம் இல்ல. அதுனால ராஜா படம் எடுத்த குதிரைல போற மாதிரி தான் காட்ட முடியும்.

உங்களுடைய அடுத்த இலக்கு எனக்கு தெரியும். அடுத்து நீங்க எந்த ஒரு விவசாயும் மாடு வெச்சு ஒலவு ஓட்டக்கூடாது வண்டி ஓட்ட கூடாதுன்னு சொல்வீங்க. அதுதானே ? அப்புறம் பால் கறக்க கூடாதுன்னு கூட நீங்க சொல்லலாம், because எந்த ஒரு மாடும் அதுவே பால குடுக்கரதில்ல நாமே தான் கறக்கிறோம் அதனால அதுக்கு வலிக்குது அப்படி எப்படின்னு எதாவது சொல்லுங்க கேஸ் நிச்சயம் கெடக்கும். ஆனா என்ன அப்புறம் பாலுக்கு பதிலா எத குடிப்பீங்க ? டீ எப்படி போடுவீங்க, தயிர் எப்படி கிடைக்கும். பதில் சொல்லுங்க விலங்குகளே ஸாரி விலங்குகள் நல வாரியமே...

அடுத்து நீங்க கொசுவர்த்தி விளம்பரம், எலி மருந்து விளம்பரம், கரப்பான்பூச்சி கொள்ளி விளம்பரம் ஆகியவற்றை தடை செய்ய கேஸ் போடலாம் என்று என் நண்பர் ஒருவர் சொன்னார். அவர் சொன்னது சரி. அந்த மாதிரி விளம்பரத்துல அதை கொல்ற மாதிரி காட்டுராங்கல்ல. அப்போ கொசுவும் எலியும் வருத்த படாதா ? அந்த விளம்பரத்தில் வர மாதிரி நம்மையும் கொன்னு போட்ட்ருவாங்கன்னு அது பயந்து சாகாதா ? அப்படி பயந்து அதுக்கு மன அழுத்தம் ஆகி பைத்தியம் புடுச்சா அதுக்கு நீங்களா ஆஸ்பிடல் செலவு பண்ணுவீங்க ??

இந்த மாதிரி முட்டாள்கள் விலங்குகள் நல வாரியத்தில் இருந்தால் யாருக்கும் நல்லதில்லை. கலைஞர்களுக்கும் சரி மக்களுக்கும் சரி. எவ்ளோ விலங்குகள் ரோட்டில் அடி பட்டு சாகுது அத மொதல்ல சரி பண்ணுங்க அப்புறம் மத்தத பாருங்க...

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories6 comments: to “ வோடாபோன் நாய் குட்டியும், விலங்குகள் நல வாரியமும்.....

 • Anonymous
  May 14, 2008 at 2:03 PM  

  haha, sariyana comedy ponga..
  especially antha kosuku vaithiyam paaka sonathu..
  neenga sonathu sarithanga inum konja naala goodnight add kum
  kosu vanthu ukara mari katranga thunburuthranganu soluvanga
  But unmeliye naaiya koduma panina athu thapunga.. ilaya?
  But d concept you said is correct.. Hatz up to you!!
  Prabhakar

 • Muruhanantham. C
  May 14, 2008 at 2:26 PM  

  periya concept ellam naan solla varalenga.. padikkaravanga rasikkanum.. mudincha konjam sindikkanum.. aduve podum enakku..

  unmayalaye naaya koduma paduthina adu thappu thaan.. aana antha vilambarathula appadi panra madiri enakku thonala.. adaan appadi eludinean..

  karuthukku nandri..

 • Anonymous
  May 14, 2008 at 2:42 PM  

  Inga yenaku oru doubt... Neenga antha shooting yeduthathopo erunthingala pina yepdi theriyum atha koduma padathalanu..

  Oru velai kodumai paduthiruntha..
  Apo unga Karuthu....????

  Prabhakar

 • Muruhanantham. C
  May 14, 2008 at 2:50 PM  

  mostly irukka vaaipilla.. antha naaya paatha koduma padidina madiri illa.. poduva koduma eppadi paduthuvaanganna soru podaama thaane.. nalla kolu kolunnu irukkara ada paatha appadi illanga.. ellam oru guess thaan.. vilangugal nala variyamum guess panni thaan solraanga.. avanga kittayum entha proofum illanga koduma padithinaga appadingaradhukku..

  nandri...

 • Anonymous
  May 14, 2008 at 3:02 PM  

  Neenga sona intha concept i think its not proper..

  i,e kolu kolunu eruntha arokiyam nu artham dats wrong.. apdi paatha.. example street pigs also very fat adukum soru kedaikirathila..

  More over athu shooting ku kondu vanthapo apdi erunthrukalam ipo kodumai padithi shooting mudinja piragu.. antha doggy yena conditiono??? apo melinjuruntha..you saw that???? yena solringa..

  Readers iam i rite???

  Prabhakar

 • Muruhanantham. C
  May 14, 2008 at 3:13 PM  

  u r right.. makes sense.. aana poduva engoorla ellam naai nalla kolu kolunnu irundha arokiyama irukkudunnu thaan solluvaanga.. ada vechu thaan eludinean..

  u have given me a nice topic (ie) how to find whether a dog is healthy or not ?

  thanks for tat anyway :)