Saturday, August 30, 2008

சாமி கும்பிடுவது தேவையா ?  

முதலில் ஒரு தன்னிலை விளக்கம். எனக்கு கடவுள் நம்பிக்கை அவ்வளவாக கிடையாது. நல்ல பழக்க வழக்கங்களும் யாருக்கும் துரோகம் செய்யாமலும் இருப்பதே கடவுளுக்கு மேலானது என்பதை நம்புபவன் நான். பெற்றோர் மனதை கஷ்டப்படுத்த கூடாது என்பதற்காக அவர்களுடன் கோயில் சென்று கெடா கறியை மட்டும் ருசிக்கும் ஒரு வினோதமான ஆள் நான்.

எங்கள் வீட்டு முன்னால் ஒரு கோயில் ஓரிரு வருடங்களாக இருக்கிறது. அது ஒரு திடீர் கோயில். அது எந்த சாமி கோயில்னு தெரியாமையே ரொம்ப காலம் வாழ்ந்திருக்கேன். அந்த கோயிலை ஒரு அடையாள சின்னமாக (land mark) ஆக மட்டும் உபயோகித்திருக்கிறேன் சில சமயம் அதுவும் 'அந்த புதுசா ஒரு கோயில் கட்ராங்கள்ள அங்க வாங்க' அப்படி தான் சொல்லியிருக்கேன். ஒரு சமயம் அது எந்த சாமி கோயில் என்று ஒரு நண்பர் கேட்டார். அப்பொழுது தான் தெரிந்தது இவ்ளோ நாளா நான் அது எந்த சாமின்னே தெரியாம இருந்திருக்கோமேன்னு ரொம்ப வருத்த பட்டேன்.

நான் முழு நாத்திகன் இல்லை. முழு ஆத்திகனும் இல்லை. எந்த வழியில் போவது என்ற தெளிவும் இல்லை. ஒரு குழப்பமான நிலை. கடவுளை ஏன் கும்பிட வேண்டும் என்ற கேள்விக்கு பதில் இல்லாததால் கும்பிடுவதில்லை. கூடிய சீக்கிரம் ஏதோ ஒரு வழியை முழுதாக தேர்வு செய்ய வேண்டும். இந்த ரெண்டும்கெட்டான் பொழப்பு ரொம்ப கஷ்டம்.
சமீபத்தில் கூட கும்பகோணம் கோயில் தளங்களுக்கு குடும்பத்துடன் சென்றேன். கோயில் வேலைப்பாடுகளை ரசிக்க சொல்லிய மனது என்னவோ கடவுளை கும்பிட சொல்லவில்லை. ஆனாலும் கை கூப்பி நின்றேன்.

நான் கேள்வி பட்ட வரையில் கோயிலுக்கு போவது நல்லது. ஒரு வித வைப்ரேசென் இருக்குமாம். அது உடலுக்கும் மனதுக்கும் நல்லது என்று கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் இப்போதெல்லாம் என்ன செய்கிறார்கள் என்றால் ரோட்டில் நின்றோ அல்லது வண்டியில் போய்க்கொண்டே கையை வாயின் அருகில் வைத்து ஒரு ஆர்க் போட்டு விட்டு போகிறார்கள். இதில் காமெடி என்னவென்றால் சின்ன குழந்தைகளை கூட அவ்வாறே செய்ய சொல்கிறார்கள் பெற்றோர்கள். அவர்களும் செய்கிறார்கள். அந்த சின்ன குழந்தைகள் அப்படி என்னதான் வேண்டும் ?. எனக்கு புரியவில்லை. டீச்சர் அடிக்ககூடாதுன்னா ? சாமி இந்த மாதிரி சின்ன புள்ள தனமான கோரிக்கையெல்லாம் செல்லாது செல்லாது என்று சொல்லி விட மாட்டாரா ?.

எனக்கு தெரிந்து கஷ்டம் வந்தால் மட்டும் சாமியை கூப்பிடும் ஆட்கள் நிறைய இருக்கிறார்கள். அது நல்லதா ?. சில ஆட்கள் கோயிலே கதி என்று கிடக்கிறார்கள். அதுவும் சரியா ?. பதில் இல்லை.

அதே மாதிரி விதியையும், ஜாதகத்தையும் நொந்து கொண்டு நொண்டி சாக்கு தேடும் நிறைய பேரை தெரியும். அவர்கள் எல்லாம் என்னை பொறுத்த வரையில் முட்டாள்கள். கையாலாகதவர்கள். நம்மையும் மீறி ஒரு சக்தி இருக்கும் என்பதை நம்பினாலே போதும். மற்ற எதையும் நம்ப தேவையில்லை.

என்னடா சாமி பெற வெச்சுகிட்டு அறிவுரை பண்ணிக்கிட்டு இருக்கானேன்னு யோசிக்கறீங்களா? அது என் கட்டுப்பாடில்லாமல் நடந்த விசியம். அவ்ளோ தான்.

நண்பர்களே.. என் குழப்பத்தை தீர்த்து வையுங்கள். அல்லது இன்னும் குழப்புங்கள். பின்னூட்டம் அவசியம் :)

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories



3 comments: to “ சாமி கும்பிடுவது தேவையா ?