Saturday, September 20, 2008

வெர்ஜின் பிடிக்காது எனக்கு, உங்களுக்கு எப்படி ?..  


எப்படி தலைப்பு ? உங்கள உள்ளே வர வெச்சுட்டோம்ள.... 

ஒரு நல்ல மெசேஜ் உள்ள இருக்கறதால இந்த மாதிரி தலைப்பு வெச்சு உங்களை வர வெச்சுட்டேன் அப்படிங்கற வருத்தம் எனக்கு சுத்தமா இல்லை... 

தொடர்ந்து படியுங்க..

வெர்ஜின் மொபைலின் யோ.யோ ப்ளானின் விளம்பரத்தை பார்த்தீர்களா ? இந்த மாதிரி விளம்பரங்கள் ஒரு விதமான சாபக்கேடு. ஒரு புனிதமான சேவையை எவ்வளவு கேவல படுத்த முடியுமோ அவ்வளவு படுத்தி இருக்கிறார்கள். இதை பிரகாஷ் வர்மா என்பவர் நிர்வாணா (சூப்பர் பேரு !) நிறுவனத்தின் சார்பில் இயக்கியிருக்கிறார். 

என்ன கான்செப்ட்னா......... 

ஒரு வாலிபன் கையில் கட்டுடன் ஹாஸ்பிடல் படுக்கையில் படுத்திருக்கிறான். ஒரு நர்ஸ் உள்ளே வருகிறார். அப்பொழுது அந்த பையனின் செல்போன் அடிக்கிறது. கையில் கட்டு போட்டிருப்பதால் அந்த நர்ஸ் ஐ உதவிக்கு அழைக்கிறான். செல்போன் முதலில் ஒரு பான்ட் பாக்கெட்டில் இருப்பதாக சொல்கிறான், நர்சும் உள்ளே கையை விட்டு பார்த்து இல்லை என்று சொல்கிறார். இவனோ இல்ல இல்ல போன் இன்னொரு பாக்கெட்டில் இருப்பதாக சொல்கிறான். நர்சும் இன்னொரு பாக்கெட்டிலும் கையை விட்டு இல்லை என்று சொல்லி விட்டு போய் விடுகிறார். 

அவர் போன பின்பு கையில் ஒளித்து வைத்திருந்த போனை எடுத்து நண்பனிடம் நம்மோட ஐடியா வொர்க் அவுட் ஆயிருச்சுன்னு சொல்லி சிரித்தபடியே பேசுகிறான். அந்த வாலிபனின் ஒரே குறிக்கோள் அந்த நர்ஸ் அவனுடைய பான்ட் பாக்கெட்டில் கையை விட வேண்டும் என்பது தான். என்னே ஒரு உயர்ந்த எண்ணம்...

நர்ஸ் தொழில் ஒரு மிகப்பெரிய சேவை என்று வசனம் பேசிக்கொண்டே இந்த மாதிரி சீரழிவுகளை எளிதில் அனுமதித்து விடுகிறார்கள். விளம்பரம் ஹிட் ஆகவேண்டும் என்ற ஒரே குறிக்கோளுக்காக இந்த மாதிரி விளம்பரம் எடுத்த இயக்குனருக்கு என் பலத்த கண்டனங்கள். விளம்பரம் எடுப்பவர்களுக்கும் ஒரு வித சமூக பொறுப்புணர்வு வேண்டும். ஏன் என்றால் விளம்பரங்களின் ரீச் அப்படி. பட்டி தொட்டியெல்லாம் பார்க்கிறார்கள். அந்த அக்கறை வேண்டும் இயக்குனருக்கு. 

இதே விளம்பரத்தை அடிக்கடி ஒளிபரப்பும் போது அதை பார்க்கும் வாலிபர்கள் நர்ஸ்களை தவறான நோக்கத்துடன் பார்க்க வாய்ப்பிருக்கிறது. இந்த மாதிரி எடுப்பதற்கு பதிலாக நர்ஸ்களை அம்மாவுக்கு இணையாக காட்டுவது போல காட்டியிருந்தால் பார்ப்போர் மனதில் ஒரு வித நல்ல மாற்றங்கள் நிகழலாம். நிகழாவிட்டாலும் ஒண்ணும் பாதிப்பு இல்லை.. ஆனால் இந்த தவறான விளம்பரத்தால் எவனோ ஒருத்தன் நர்சை தவறாக பார்த்தாலோ, நினைத்தாலோ, அல்லது ஏதாவது செய்தாலோ அதற்கு அந்த இயக்குனர் தான் பொறுப்பு..

மகளிர் அமைப்புகளே, செவிலியர் அமைப்புகளே விழித்து கொள்ளுங்கள். விளம்பரத்தை தடை செய்ய இணைந்து போராடுவோம்.........

விளம்பரத்தை பார்க்க விரும்புபவர்கள் இங்கே க்ளிக்கவும்.

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories22 comments: to “ வெர்ஜின் பிடிக்காது எனக்கு, உங்களுக்கு எப்படி ?..

 • Anonymous
  September 20, 2008 at 8:29 PM  

  ரொம்ம்ம்ம்ம்ப நல்ல்ல்லவன்னூஊ.......

 • Anonymous
  September 20, 2008 at 8:37 PM  

  அப்பபோ இந்த விளம்பரம் வர்றதுக்கு முன்னாடி நீங்க நர்ஸ்களை அம்மா மாதிரிதான் பார்த்தீங்களா....

 • முருகானந்தம்
  September 20, 2008 at 8:41 PM  

  // அப்பபோ இந்த விளம்பரம் வர்றதுக்கு முன்னாடி நீங்க நர்ஸ்களை அம்மா மாதிரிதான் பார்த்தீங்களா... //

  நல்ல கேள்வி.. அப்படி முழுசா சொல்லிவிட முடியாது. ஆனாலும் இந்த விளம்பரத்தால் தவறுகள் அதிகம் நடக்க வாய்ப்பிருக்கிறது என்பதே நான் சொல்ல வந்த செய்தி..

  வருகைக்கு நன்றி.. இது நல்ல கேள்வி தானே ஏன் அனானியா போஸ்ட் பண்ணிருக்கீங்க ??

 • ஜுர்கேன் க்ருகேர்
  September 20, 2008 at 11:50 PM  

  //மகளிர் அமைப்புகளே, செவிலியர் அமைப்புகளே விழித்து கொள்ளுங்கள். விளம்பரத்தை தடை செய்ய இணைந்து போராடுவோம்.........//
  இதுவே அவங்களுக்கு பெரிய விளம்பரம் ஆயிடும்.அதனால

  விட்டு தள்ளுங்க பாஸ் ! இது என்ன புதுசா?
  இதுக்கு முன்ன இவங்க பண்ண விளம்பரமும் கிட்டத்தட்ட இந்த மாதிரித்தான்.
  ஒரு பொண்ணு அவ "பாய் பிரென்ட்"கூட டூர் போறதுக்கு அவ பண்ற அலும்பு"
  பெத்தவங்களை எப்படி ஏமாத்தறதுன்னு சொல்லி குடுத்திருப்பாங்க!

  குறிப்பு: நீங்க போராட்டம் பண்ண நம்ம நாட்டுல நெறைய முக்கியமான விஷயம் இருக்கு.(எனக்கும் சொல்லி அனுப்புங்க ரொம்ப நியாயமா இருந்தா கை கொடுப்பான் இந்த தமிழன்!)

 • சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்)
  September 20, 2008 at 11:53 PM  

  yes, brother, some cinema also have same type of parts.

  neenaga sonathai nanum vazhimozhikiren.....

  www.nallasudar.blogspot.com

 • முருகானந்தம்
  September 21, 2008 at 6:35 AM  

  வாங்க ஜுர்கேன் க்ருகேர்..

  // ஒரு பொண்ணு அவ "பாய் பிரென்ட்"கூட டூர் போறதுக்கு அவ பண்ற அலும்பு"
  பெத்தவங்களை எப்படி ஏமாத்தறதுன்னு சொல்லி குடுத்திருப்பாங்க! //

  ரொம்ப வருத்தம் தான்.. ஆனாலும் என்னை பொறுத்த வரையில் இந்த விளம்பரம் அதையெல்லாம் தாண்டி விட்டது, அதான் பொலம்பி விட்டேன்..

  அடிக்கடி வாங்க :)

 • முருகானந்தம்
  September 21, 2008 at 6:38 AM  

  வாங்க சுடர்மணி...

  // neenaga sonathai nanum vazhimozhikiren.....//
  நன்றி.. :)
  இதை வழி மொழிந்த நீங்க இனிமேல் ரொம்ப நல்லவார்ர்ர்......

  அடிக்கடி வாங்க..

 • The Rebel
  September 21, 2008 at 8:59 AM  

  Virgin Mobile இன் Ads இப்படி தான்..இதெல்லாம் கவனத்தை கவர்வதற்கான வழி..வேறென்ன..
  அட்ஸ் சென்சார் போர்டு இருக்கா..

 • முருகானந்தம்
  September 21, 2008 at 9:59 AM  

  // Virgin Mobile இன் Ads இப்படி தான்..இதெல்லாம் கவனத்தை கவர்வதற்கான வழி.. //

  சரியாக சொன்னீர்கள்.. நல்லா கவருகிறார்கள் கவனத்தை......

  வருகைக்கு நன்றி the rebel.

 • Anonymous
  September 21, 2008 at 12:55 PM  

  Did you notice the nurse was in micro-mini skirt?

 • G.Ragavan
  September 21, 2008 at 2:10 PM  

  ஏதாச்சும் கதை படிச்சீங்கன்னா...அதுல மொதல்ல வில்லன் ஜெயிக்கிற மாதிரி வரும். வெட்டுவான் கொல்லுவான். ஆகையால அந்தக் கதை அதை ஆதரிக்குதுன்னு சொல்ல முடியாது. ஏன்னா கடைசீல எல்லாத்துக்கும் சேத்து கதாநாயகன் கிட்ட வாங்குவான்.

  அந்த மாதிரி இந்த விளம்பரத்துல பாத்தீங்கன்னா... மொதல்ல நீங்க சொல்றாப்புலதான் இருக்குது. ஆனா அப்படி தப்பா நெனைச்சவங்களுக்கு ஆப்பு வெச்சாங்களே விளம்பரம் முடியுறப்போ...அத விட்டுட்டீங்களே.

 • முருகானந்தம்
  September 21, 2008 at 3:38 PM  

  // அப்படி தப்பா நெனைச்சவங்களுக்கு ஆப்பு வெச்சாங்களே விளம்பரம் முடியுறப்போ...அத விட்டுட்டீங்களே //

  தப்பு செய்த வாலிபனுக்கு ஒரு ஆப்பும் இல்லை, அவனுடைய நண்பனுக்கு தான் ஆண் நர்ஸ் வருவார்..

  கவனித்தீர்களா ?

  வருகைக்கு நன்றி ராகவன்..

 • முருகானந்தம்
  September 21, 2008 at 3:51 PM  

  // Did you notice the nurse was in micro-mini skirt? //

  அப் கோர்ஸ்.. விளம்பரம் எடுத்தவர்களின் நோக்கமும் அது தானே.. நர்ஸ்களை கவர்ச்சி பொருளாக காட்டி பார்ப்பவர்களின் புத்தியை தடுமாற செய்யவேண்டும் என்பது..

  வருகைக்கு நன்றி..

 • செல்வ கருப்பையா
  September 21, 2008 at 4:32 PM  

  அந்த விளம்பரத்துக்கும் உங்களோட இந்தப் பதிவுக்கும் பெரிதாக ஒன்றும் வித்தியாசமில்லை.

 • முருகானந்தம்
  September 21, 2008 at 4:51 PM  

  // அந்த விளம்பரத்துக்கும் உங்களோட இந்தப் பதிவுக்கும் பெரிதாக ஒன்றும் வித்தியாசமில்லை //

  எதை வைத்து அப்படி சொல்கிறீர்கள்.. புரியவில்லை.. விளக்கவும்..

 • உருப்புடாதது_அணிமா
  September 21, 2008 at 4:59 PM  

  சொல்றதை எல்லாம் சொல்லிபுட்டு..
  அந்த வீடியோ படத்த பாக்க லிங்க் குடுத்த நீங்க எங்கியோ போய்ட்டீங்க...

 • செல்வ கருப்பையா
  September 21, 2008 at 5:01 PM  

  நன்றி முருகானந்தம் - react செய்யாமல் விளக்கம் கேட்டதற்கு. நல்ல விஷயத்திற்காக என்று குறிப்பிட்டிருந்தாலும் உங்களுடைய பதிவின் தலைப்பு அந்த விளம்பரம் மாதிரியேயான ஒரு கவர்ச்சிக்காக, ஆட்களை இழுப்பதற்காகக் கொடுக்கப் பட்டுள்ளது. நல்ல விஷயம் சொல்லும் நீங்கள் இதைத் தவிர்த்திருக்கலாம்.

 • முருகானந்தம்
  September 21, 2008 at 5:06 PM  

  // சொல்றதை எல்லாம் சொல்லிபுட்டு..
  அந்த வீடியோ படத்த பாக்க லிங்க் குடுத்த நீங்க எங்கியோ போய்ட்டீங்க.. //

  நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள். அந்த விளம்பரத்தை இதுவரையில் பார்க்கதவர்களுக்கு தான் அது.. அதை ஒரு முறையாவது பார்த்தால் தான் அந்த கேவலம் எளிதில் விளங்கும். அது தான் நோக்கம் ..

  வருகைக்கு நன்றி :)

 • முருகானந்தம்
  September 21, 2008 at 5:17 PM  

  // உங்களுடைய பதிவின் தலைப்பு அந்த விளம்பரம் மாதிரியேயான ஒரு கவர்ச்சிக்காக, ஆட்களை இழுப்பதற்காகக் கொடுக்கப் பட்டுள்ளது. நல்ல விஷயம் சொல்லும் நீங்கள் இதைத் தவிர்த்திருக்கலாம் //

  சரிதான்.. முயற்சி செய்கிறேன். நான் என்ன நினைத்து இந்த தலைப்பு வைத்தேன் என்றால் எப்படியாவது இந்த செய்தி அதிக பேருக்கு போய் சேர வேண்டும் என்பது தான்.. தலைப்பு மொக்கையாக இருந்தால் யாரும் வர மாட்டார்களோ என்ற பயம் தான் காரணம். :)

  வருகைக்கும், தாங்களின் அறிவுரைக்கும் நன்றிகள்.. :)

 • enpaarvaiyil
  September 21, 2008 at 8:59 PM  

  intha vilambarathaalthaan vaaliba ullangal kettu poividum enpathu sutha abattham.vayittril irukum kuzhanthaigale kettu poithaan velivaruginrana.

 • முருகானந்தம்
  September 21, 2008 at 9:27 PM  

  // intha vilambarathaalthaan vaaliba ullangal kettu poividum enpathu sutha abattham.vayittril irukum kuzhanthaigale kettu poithaan velivaruginrana. //

  உண்மைதாங்க சார்.. :)
  பெரியவங்க சொல்றீங்க சரியாதான் இருக்கும்..

  வருகைக்கு நன்றி...

 • KISHORE
  July 29, 2009 at 7:33 AM  

  nalla than ulla vara vakiringa..